Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சனிப்பெயர்ச்சி விழா; திருநள்ளாறு ... திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவிலில் தீர்த்தவாரி;  திரளான பக்தர்கள் தரிசனம் திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறை பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி; திரளான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறை பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி; திரளான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

03 மார்
2026
10:03

மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச பெருமாள்கள் எழுந்தருள திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பௌர்ணமி திதி, மகம் நட்சத்திரம் கூடிய மாசி மகத்தினை திருநாளை முன்னிட்டு  மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் தேவார பாடல் பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் இருந்து இன்று அதிகாலை ஆனந்தவல்லி அம்பாள் சமேத சந்திரசேகர சுவாமி அஸ்திர தேவருடன் வெள்ளி மஞ்சளத்தில் எழுந்தருள மங்கள வாத்தியங்கள் இசைக்க புறப்பாடு செய்யப்பட்டு சூரிய உதயத்தின் போது பூம்புகார் காவிரி சங்கமத் துறையில் எழுந்தருளினார். அங்கு சிவாச்சாரியார்கள் சுவாமி, அம்பாளுக்கு விசேஷ பூஜைகளை நடத்தி வைத்தனர். அஸ்திரதேவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் அஸ்திர தேவர் காவிரி சங்கமத் துறையில் தீர்த்தம் அளிக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் காவிரி கடலுடன் சங்கமிக்கும் இடத்தில் நீராடி சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி : ராம நவமியை முன்னிட்டு திருமலையில்  ஸ்நபன திருமஞ்சனம் எனும் புனித நீராட்டு வைபவம் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் ஆண்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar