Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி கோதண்டராமர் கோவிலில் ... சிறியூர் மாரியம்மன் ஆபரண பெட்டி அழைத்து செல்லும் நிகழ்ச்சி சிறியூர் மாரியம்மன் ஆபரண பெட்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்திர கிரகணம் இன்று கோவில்களில் நடை அடைப்பு; சாந்தி பூஜைகளுப்பின் பக்தர்கள் தரிசிக்கலாம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 சந்திர கிரகணம் இன்று கோவில்களில் நடை அடைப்பு; சாந்தி பூஜைகளுப்பின் பக்தர்கள் தரிசிக்கலாம்

பதிவு செய்த நாள்

03 மார்
2026
08:03

வால்பாறை: நாடு முழுவதும் சந்திரகிரகண நிகழ்வு இன்று நடக்கிறது. இதையொட்டி, பெரும்பாலான கோவில்களில் இந்நிகழ்வின் போது நடை அடைக்கப்படுகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை நகரில், மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுப்பிரமணிய சுவாமி கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. இன்று (3ம்தேதி) மாலை, 3:20 முதல் மாலை, 6:47 வரை சந்திரகிரகணம் நிகழ்கிறது. இதனால், காலை, 6:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை மட்டுமே நடை திறக்கப்படும். பிற்பகல் 1:00 மணிக்கு மேல் கோவில் நடை அடைக்கப்படும். நாளை (4ம் தேதி) காலை, 6:00 மணி முதல் வழக்கம் போல் கோவில் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும். மேற்கண்ட தகவலை சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல்அலுவலர் ேஹமாசாலினி தெரிவித்துள்ளார். 

 கடலுார்: கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சந்திர கிரகணத்தையொட்டி இன்று கோவில் நடை மூடப்படுகிறது.கடலுார், திருவந்திபுரத்தில் பிரசித்திப் பெற்ற தேவநாத சுவாமி கோவில், தேவநாத சுவாமிக்கு மாசி மகத்தை முன்னிட்டு இன்று 3ம் தேதி காலை சிறப்பு பூஜைகள் முடிந்து தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு எழுந்தருளச் செய்து, தீர்த்தவாரி நடக்கிறது. மேலும், சந்திர கிரகணம் நிகழ்வதால் இன்று அதிகாலை 3:00 மணி முதல், இரவு 11:00 மணி வரை கோவில் நடை சாத்தப்படுகிறது. இதனால் மூலவரை தரிசனம் செய்ய இயலாது. இத்தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் இன்று (மார்ச் 3) சந்திர கிரகணத்தை முன்னிட்டு பூஜை மற்றும் நடை திறப்பு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோயில் நிர்வாக அலுவலர்கள் கூறியதாவது:  இன்று (மார்ச் 3) சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதையொட்டி, கோயிலில் வழக்கமாக நடைபெறும் பூஜைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மதியம் 12:30 மணிக்கு உச்சிக்கால பூஜைகள் முடிக்கப்பட்டு திருக்கோயில் நடை அடைக்கப்படும். கிரகணம் முடிந்து இரவு 8:00 மணிக்கு கிரகண சாந்தி பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்காக கோயில் நடை மீண்டும் திறக்கப்படும்.​எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த நேர மாற்றத்தை கவனித்து, அதற்கேற்ப தங்களது தரிசனத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar