Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சினக்கத்தூர் பகவதி அம்மன் கோவில் ... பேரூர் ஆதினத்தில் சனாதன தர்ம ஆன்மிக பல்கலை அமைக்க வேண்டும் பேரூர் ஆதினத்தில் சனாதன தர்ம ஆன்மிக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவராயம்பாளையம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் மாசிமகத் தேர் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேவராயம்பாளையம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் மாசிமகத் தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

03 மார்
2026
08:03

அவிநாசி; தேவராயன்பாளையம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் மாசிமகத் தேர் விழா நடைபெற்றது.

அவிநாசி வட்டம், தேவராயன்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மாசிமகத் தேர் விழா நடைபெற்றது. மாசிமகத் தேர் திருவிழா, கடந்த 23ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து 24ம் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றம் நிகழ்ச்சிகளுடன் அபிஷேக ஆராதனை,சுவாமி திருவீதி உலா, அம்மை அழைத்தல் வரும் நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற்றது. நேற்று விநாயகருக்கு 108 குடம் பால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோ பூஜை, ஸ்ரீ காமாட்சி அம்மன் தேருக்கு எழுந்தருளல், பொங்கல் வைத்தல் ஆகியவை நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். மாசிமகத் தேர்த்திருவிழாவில்,நேற்று மாலை திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம், ஸ்ரீ காமாட்சி சுவாமிகள் தலைமையில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று வண்டித்தாரை, பரிவேட்டையும்,நாளை தரிசனம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது .5ம் தேதி ஸ்ரீ முத்துக்குமாரசுவாமிக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகளுடன் விழா நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar