Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாபாகன் பார்பாரிகன்! பார்பாரிகன்!
முதல் பக்கம் » பிரபலங்கள்
நரசிம்ம மேத்தா
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 ஆக
2012
02:08

குஜராத் பாவ்நகர் மாவட்டத்தில் புராதனகடம் என்ற சிற்றூரில் பலராம்மேத்தா என்பவர் வசித்து வந்தார். இவர் நல்லொழுக்கம் மிக்கவர். நரசிம்ம மூர்த்தியை இஷ்ட தெய்வமாகக் கொண்டவர். வயது முதிர்ந்த காலத்தில் 1414ம் வருடம் இவருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. நரசிம்மரின் பெயரை குழந்தைக்குச் சூட்டினார். அவருக்குச் செல்லம் கொடுத்து வளர்த்ததால் அடங்காத்தனமாகத் திரிந்தார். நரசிம்ம மேத்தாவைப் பற்றிய கவலையிலேயே பெற்றோர் இறந்துவிட்டனர். அனாதையான நரசிம்மமேத்தா, தன் சித்தப்பா யமுனாதாஸ் வீட்டில் வளர்ந்தார். அங்கும் அவரது சேஷ்டைகள் தொடர்ந்தன. சித்தப்பா மகன் அவர் மீது அன்பாக இருப்பார். ஆனால், அவரது மனைவிக்கோ நரசிம்மமேத்தாவை பிடிக்காது. ஒருமுறை பள்ளிக் குழந்தைகளுடன் நரசிம்மமேத்தா சண்டையிட்டு, வீட்டிற்கு புகார் வந்தது. இதனால், ஆத்திரமடைந்த சித்தப்பாவின் மனைவி, நரசிம்மமேத்தாவை வீட்டை விட்டு விரட்டி விட்டாள். அவர் ஒரு குளக்கரையில் அமர்ந்து, செய்த சேஷ்டைகளை எல்லாம் எண்ணி வருந்தினார். தனக்குத் தெரிந்த சிவநாமாவளிகளை மனம் உருகச் சொன்னான். நாமாவளிகளைச் சொல்லச் சொல்ல நேரம் காலம் தெரியாமல், பசி தாகம் கூட மறந்து போய்விட்டார். அப்போது யாரோ ஒருவர் தனது தோள் பற்றுவதை அறிந்து கண்திறந்து பார்த்தான். எதிரே ஜடாமகுடதாரியாய் கயிலைநாதர் காட்சி தந்தார். அவரது பாதம் பணிந்தான்.

குழந்தாய்! நரசிம்மா! நீ ஸ்ரீமந்நாராயணனுக்கு பணி செய்வதற்காக இவ்வுலகத்திற்கு வந்தாய். உன் அருந்தவம் கண்டு உன் அன்னை பார்வதிதேவி அகம் மகிழ்ந்தாள். என்னுடன் வா, என்று கூறி தன்னுடன் அழைத்துச் சென்றார். ஒரு தடாகத்தின் கரையில் அமர்ந்து மேத்தாவை தன்னருகில் அமர்த்திக் கொண்டார். அப்போது இனிய குழலோசை காற்றில் மிதந்து வந்தது. அங்கு மாயக்கண்ணன் பல வடிவங்கள் எடுத்து, கோபியருடன் புல்லாங்குழல் இசைத்தபடியே ஆடி மகிழ்ந்து கொண்டிருந்தார். அவர் மேத்தாவின் அருகில் வந்து, நீ கண்ட இந்த பிருந்தாவனக் காட்சிகளை பாடல்களாகப் பாடு, என்று கூறி சில துளசி இலைகளை மேத்தாவின் வாயில் இட்டார். அதன்பிறகு அவர் பாடல்கள் பாடுவதில் வல்லவன் ஆனார். சித்தப்பா யமுனாதாஸ் நடந்ததை அறிந்து, மேத்தாவைத் தேடி ஆள் அனுப்பினார். எங்கும் அவரைக் காணவில்லை. ஒருமுறை மாடுமேய்க்கும் சிறுவன் ஒருவன் காட்டிலுள்ள பாழடைந்த கோயிலில், மந்திரச்சத்தம் கேட்டதாக யமுனாதாசிடம் கூறினான். யமுனாதாஸ் அவ்விடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு அவர் கண்ட காட்சி, கண்களில் கண்ணீரை வரவழைத்தது. எலும்பும் தோலுமாய் உடல் இளைத்துப்போன நிலையில் நரசிம்ம மேத்தா அமர்ந்திருந்தார். அவரைக் கட்டியணைத்து அழுதார். மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்து உணவிட்டார். வீட்டில் நரசிம்மமேத்தா கண்ணனைப் பற்றிப் பாடுவதும், பஜனை செய்வதுமாக பொழுதைக் கழித்தார். இளைஞரான அவருக்கு  மானெக்பாய் என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். இல்லறத்தின் பயனாய், ஒரு மகனும், மகளும் பிறந்தனர். வேலை எதுவும் செய்யாததால் குடும்பம் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமால் தத்தளித்தது. ஆனால், நரசிம்மமேத்தாவை பணக்கார சம்பந்தம் தேடி வந்தது.

சியாமளாபுரம் என்ற சிறிய நகரம். அங்கு வசித்த திரிபுராந்தகர் என்ற வசதி படைத்த அந்தணர் தன் மகளை வசதிமிக்க குடும்பத்தில் திருமணம் செய்து கொடுக்க எண்ணியிருந்தார். திரிபுராந்தகருக்கு கிருஷ்ணபட்டர் என்ற நண்பர் இருந்தார். தெய்வபக்தி மிக்க நரசிம்மமேத்தாவின் மகனுக்கு திரிபுராந்தகரின் மகளைத் திருமணம் செய்து கொடுக்கலாம் என்று கிருஷ்ணபட்டர் யோசனை சொன்னார். வசதியே இல்லாத ஏழை மருமகனை ஏற்றுக்கொள்ள திரிபுராந்தகர் தயங்கினாலும், நண்பருக்காக சம்மதித்தார். கிருஷ்ணபட்டர் இவ்விஷயத்தை நரசிம்ம மேத்தாவிடம் தெரிவித்தார். மேத்தாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. மேலும் முகூர்த்த நாளைக் குறித்து, மணமகளைஅழைத்துக் கொண்டு சியாமளாபுரம் வரும்படி தகவல் அனுப்பினார். திரிபுராந்தகரோ திருமண ஏற்பாட்டைக் கவனிக்காமல் அசட்டையாக இருந்து விட்டார். நரசிம்மமேத்தா ஊராருடன் கண்ணனின் பாடல்களை இசைத்தபடி, சியாமளாபுரம் வந்து கொண்டிருந்தார். கண்ணபிரான், ருக்மணி, சிவபெருமான், பார்வதி, தேவேந்திரன் முதலானவர்களும் செல்வந்தர்களைப் போல உருவெடுத்து பூலோகம் வந்து கொண்டிருந்தனர். அவர்களது பணியாட்கள் ஏராளமான ஆபரணங்கள், பட்டாடைகள், பழவகைகள், வாசனை திரவியங்கள் ஏந்தி உடன் வந்தனர். ஒரு சந்திப்பில் கடவுளர்களின் ஊர்வலமும், மணமகன் வீட்டாரின் ஊர்வலமும் இணைந்தது. நரசிம்மமேத்தாவிடம், கிருஷ்ணர்,  இவை அனைத்தும் உங்களுக்காகவே வந்துள்ளது. எங்கிருந்து வந்தது என்பதை பின்னால் நீங்களே தெரிந்து கொள்வீர்கள். மணமகளுக்குரிய சீதனமாக இவற்றைக் கொடுத்துவிடலாம், என்றார். இந்த அதிசய நிகழ்வால் மேத்தா ஆச்சர்யம் அடைந்தார். அனைவரும் திரிபுராந்தகர் வீட்டிற்குச் சென்றனர். செல்வச் சீமான்போல வந்த அனைவரையும் கண்ட அவர் நடுங்கிப் போனார். இரவோடு இரவாக திருமண ஏற்பாடுகள் நடந்து முடிந்தன. மறுநாள் திருமண வைபவம் சிறப்பாக நடந்து முடிந்தது. சிவவிஷ்ணுவே நேரடியாக வந்து மணவிழாவில் கலந்து கொண்டதை அறிந்த நரசிம்மமேத்தாவின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

ஸ்ரீகிருஷ்ணரின் புகழைப் பாடிய நரஸி மேத்தாவின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களை, குஜராத் மக்கள் இன்றைக்கும் கதைகதையாகச் சொல்லிப் பூரிக்கின்றனர். அவற்றில் ஒரு சம்பவம்... நரஸி மேத்தாவின் மகள் வளர்ந்து, உரிய பருவத்துக்கு வந்தாள். அவளுக்குத் திருமணத் தேதியும் குறித்தாகிவிட்டது. ஆனால், நரஸி மேத்தாவிடம் சல்லிக்காசு கூட இல்லை. இருப்பினும், இறை சன்னதியிலேயே காலத்தைக் கழித்து வந்தார் அவர். அப்போது, ஜூனாகாத் பகுதியை மான்லித் என்பவர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். நரஸி மேத்தாவையும் அவரின் கிருஷ்ண பக்தியையும் அறிந்த மான்லித், நரஸிக்கு பாடம் புகட்ட நினைத்தான். நரஸியைக் கைது சிறையில் அடைத்தான். உன் மகளுக்குத் திருமணம்; உன்னிடம் காசு இல்லை. ஆனால், நீயோ எந்தக் கவலையுமின்றி, கடவுள் சன்னதியிலேயே காலத்தை ஓட்டுகிறாய்? உன்னுடைய தாமோதரனின் கழுத்தில் ஜொலிக்கிற ஹாரம், சிறையில் இருக்கிற உன் கைக்கு வந்துவிட்டால், தாமோதரனையும் உன் பகுதியையும் ஏற்றுக்கொள்கிறேன். தவிர, தாமோதரனுக்கு அடிமையாகிறேன். உம்மையும் விடுதலை செய்கிறேன் என்றான் எகத்தாளமாக. இதைக் கேட்டதும், மெய்யுருகி தாமோதரனைப் போற்றிப் பாடினார் நரஸி மேத்தா. மணிவண்ணா! என்னை உன் காலடியில் இருந்து பிரித்துவிட்டாயே... நான் என்ன தவறு செய்தேன்? என அழுது புலம்பினார்.

பக்தனின் கதறலைக் கேட்டுச் சும்மா இருப்பாரா தாமோதரன்?! நரஸி மேத்தாவுக்குத் திருக்காட்சி தந்தார். நரஸி, கேதார ராகத்தில் என்னைப் பற்றிப் பாடு! என் கழுத்து ஹாரத்தை உனக்குத் தருகிறேன் என்று பகவான் சொல்ல... நிலைகுலைந்தார் நரஸி மேத்தா. ஐயோ... கேதார ராகத்தில் பாடமுடியாதே! அதனை அடகு வைத்து, வீட்டுச் செலவுக்கு ஏற்கெனவே பணம் வாங்கி விட்டேனே! என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறினார் நரஸி மேத்தா. உடனே ஸ்ரீகண்ணன், அடகுக்கடைக்காரரிடம் சென்று, நரஸி மேத்தா தரவேண்டிய தொகையை வட்டியுடன் தந்தார்; கேதார ராகத்தை மீட்டெடுத்தார்; அதற்குச் சாட்சியாக கடைக்காரரிடம் இருந்து கடிதம் ஒன்றையும் வாங்கி வந்து, நரஸியிடம் கொடுத்தார். இப்போது பாடலாமே! என்றார் புன்னகையுடன். உடனே நரஸி மேத்தா, ஹரி ஹார் தேகா, ஹரி ஹார் தேகா எனத் துவங்கும் பாடலை, கேதார ராகத்தில் மெய்யுருகப் பாடினார். அப்போது, சன்னதியில் ஸ்ரீதாமோதரனின் கழுத்தில் இருந்த ஹாரம், அதுவாகவே கழன்று, மெள்ளக் காற்றில் மிதந்து வந்து, நரஸியின் கழுத்தில் மாலையென விழுந்தது! இதைக் கண்ட அரசன் சிலிர்த்தான். நரஸியின் காலில் விழுந்து, பணிந்தான். அவரை விடுதலை செய்ததுடன், நரஸியின் மகளது திருமணத்தையும் சிறப்புற நடத்தி வைத்தான். அதுமட்டுமா? நரஸியின் மகள் கர்ப்பமுற்றபோது, அவளுக்குச் செய்ய வேண்டிய மரேமு எனும் சடங்குகளை நடத்துவதற்கான பொருட்களையும் இறைவனே தந்தருளினான்.

ஒருமுறை, அவரின் தந்தையின் திவச தினம். உரிய நேரத்துக்குப் புரோகிதர் வந்துவிட்டார். திவசத்துக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும், கடன்பட்டு வாங்கி வைத்திருந்தாள் மனைவி. இதோ... தாமோதரனைத் தரிசித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிச் சென்றவர், அங்கே பஜனையில் இறங்கி, பரவசத்தில் மூழ்கிப் போனார்! அனைத்தையும் அறியாமலா இருப்பான் தாமோதரன்?! சன்னதியில் இருந்து கிளம்பி, தனது பக்தரின் உருவில் அவரது வீட்டுக்குச் சென்றான். மணையில் அமர்ந்து, திதி கொடுத்துவிட்டுக் கோயிலுக்கு வந்து சேர்ந்தான். பரவச நிலையில் இருந்து மீண்டவருக்கு, தந்தையின் திவசம் நினைவுக்கு வர, விழுந்தடித்துக் கொண்டு ஓடினார் வீட்டுக்கு! மனைவி ஆச்சரியமுற்று, முழுவிவரமும் சொன்னாள். நடந்தவற்றைக் கேட்டதும் விக்கித்து நின்றார் அவர். அந்தக் கண்ணனே தனது உருவில் வந்து, தன் தந்தைக்குத் திதி கொடுத்திருக்கிறான் என உணர்ந்து சிலிர்த்தார்.

வைஷ்ணவ ஜனதோ தேநே கஹியே ஜேபீட பராயி ஜானேரே, பரதுக்க உபகாரு கரே தோயே மன அபிமானந அநேரே... எனத் துவங்கி, எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள் தமது தேன்குரலில் பாடிக் கேட்டிருக்கிறீர்களா? பிறர் படும் துயரைத் தனதெனக் கருதுபவன் எவனோ, அவனே உண்மையான வைஷ்ணவன்... எனத் துவங்கி, பல உயரிய கருத்துகளை எடுத்துரைக்கும் இந்தப் பாடல், மகாத்மா காந்திக்குப் பிடித்தமானது. மகாத்மாவின் பிரார்த்தனைக் கூட்டங்களில், தவறாமல் ஒலிக்கும் பாடல்! பக்தி, ஒழுக்கம், மனிதாபிமானம், நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்திய இதுபோன்ற எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார். மேலும் ஸ்ரீகண்ணன், தன் வாழ்வில் நிகழ்த்திய அருளாடல்களை, ஹுண்டி, மரேமு, புத்ர விவாஹ் போன்ற கவிதைகளால் பாடியுள்ளார் நரஸி மேத்தா. குஜராத்தி மொழியின் தலைசிறந்த கவிஞர் என அவரைப் போற்றிக் கொண்டாடினர் மக்கள். ரகுபதி ராகவ ராஜாராம் எனும் புகழ்மிக்க பாடலும், நரஸி மேத்தா இயற்றியதுதான். இறுதி வரை இறைவனைப் பாடி மகிழ்ந்த நரஸி மேத்தா, தனது 69வது வயதில், மங்ரோல் எனும் இடத்தில் ஸ்ரீகண்ணனின் திருவடியை அடைந்தார். அவரின் திருவுடல் எரியூட்டப்பட்ட மயானம், அவரது நினைவாக, நரஸிங் நூ ஸம்ஷான் என அழைக்கப்படுகிறது.

 
மேலும் பிரபலங்கள் »
temple news

குணவதி மார்ச் 08,2017

ராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். ... மேலும்
 
temple news

துகாராம் பிப்ரவரி 03,2017

பாண்டுரங்க பக்தரான துகாராம் நித்தமும் பஜனை செய்வார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவர் பாடலைக் கேட்க ... மேலும்
 
temple news

விராதன் டிசம்பர் 14,2016

ராம -லட்சுமணர்கள் சீதா தேவியுடன் தண்டகாரண்யம் வருகின்றனர். விராதன் என்ற அரக்கன் சீதையைத் தூக்கிக் ... மேலும்
 
temple news
திருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் ... மேலும்
 
temple news

உபகோசலன் அக்டோபர் 18,2016

சத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar