Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணி ஞாயிற்றுக்கிழமையின் மகத்துவம் ... சாய்பாபா கோவில் காணிக்கை தங்கம் விரைவில் ஏலம் சாய்பாபா கோவில் காணிக்கை தங்கம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழகத்தில் அன்னதானம் வழங்க கூடுதலாக 50 கோவில்கள் தேர்வு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 செப்
2012
04:09

மாமல்லபுரம்: தமிழகக் கோவில்களில் நடைமுறைப் படுத்தப்படும் அன்னதான திட்டம், மேலும், 50 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது. தமிழகத்தில், இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தில் உள்ள திருக்கோவில்களில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம், 2002ம் ஆண்டு துவக்கப்பட்டது. இத்திட்டம், 468 கோவில்களில், நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தை, மேலும், 50 கோவில்களுக்கு விரிவுபடுத்தி, நடப்பு நிதியாண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. தற்போது, 50 கோவில்களை தேர்வுசெய்து, அங்கு விரைவில் அன்னதானம் வழங்க
 உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக, பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் அறியும் வகையில், கோவில்களில் அறிவிப்பு பலகை, அன்னதான உண்டியல் ஆகியவை அமைக்கவும், திட்ட முன்னேற்பாடுகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அன்னதானம் வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ள கோவில்கள் விவரம்:

காஞ்சிபுரம் மாவட்டம்: வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம். ஸ்தலசயனப்பெருமாள் கோவில்,  மாமல்லபுரம். திருவள்ளூர் மாவட்டம்
அகத்தீஸ்வரர் கோவில், கும்பமுனி மங்களம். வாசீஸ்வரர் சுவாமி கோவில், திருப்பாச்சூர். வீரராகவப்பெருமாள் கோவில், திருவள்ளூர்.

விழுப்புரம் மாவட்டம்: சிதம்பரேஸ்வரர் கோவில், கள்ளக்குறிச்சி. கடலூர் மாவட்டம் வைத்தியநாத சுவாமி கோவில், திட்டக்குடி.

திருவண்ணாமலை மாவட்டம்: சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், எலத்தூர் மோட்டூர்.

தஞ்சாவூர் மாவட்டம்: நாகேஸ்வர சுவாமி கோவில், கும்பகோணம். சாரபரமேஸ்வர் கோவில், திருச்சேறை. கோடீஸ்வரர் கோவில், கொட்டையூர். செல்லிஅம்மன் வகையறை கோவில், வெட்டுவாக்கோட்டை. மாரியம்மன் கோவில், வீரசிங்கம்பேட்டை. அப்பால ரங்கநாதர் கோவில், கோயிலடி. காத்தாயி அம்மன் கோவில், நெல்லித்தோப்பு (தஞ்சாவூர்).

திருவாரூர் மாவட்டம்: வீழிநாதசுவாமி கோவில், திருவீழிமிழலை.

நாகப்பட்டினம் மாவட்டம்: பரிமள ரெங்கநாதர் கோவில், திரு இந்தளூர். ரெத்தின கிரீஸ்வரர் கோவில், திருமருகல்.

திருச்சி மாவட்டம்: திருநெடுங்குளநாதர் கோவில்,  திருநெடுங்குளம்.

கரூர் மாவட்டம்: காளியம்மன், மாரியம்மன் கோவில், தான்தோன்றிமலை.

புதுக்கோட்டை மாவட்டம்: முத்துமாரியம்மன் கோவில், நார்த்தாமலை. ஆத்மநாதசுவாமி கோவில், ஆவுடையார்கோவில்.

அரியலூர் மாவட்டம்: வைத்தியநாதசுவாமி கோவில், திருமழப்பாடி.

மதுரை மாவட்டம்: மதன கோபாலசுவாமி கோவில், (மேலமாசி வீதி) மதுரை. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மேலதிருமாணிக்கம். கல்யாண
சுந்தரேஸ்வரர் கோவில், அவனியாபுரம்.

திண்டுக்கல் மாவட்டம்: மாரியம்மன் கோவில், வேடசந்தூர்.

இராமநாதபுரம் மாவட்டம்: வழிவிடுமுருகன் கோவில் மற்றும் சுவாமிநாத கோவில், இராமநாதபுரம். கைலாசநாதசுவாமி கோவில், இராஜசிங்கமங்கல வட்டம்.

சிவகங்கை மாவட்டம்: வீரசேகர உமையாம்பிகை கோவில், சாக்கோட்டை.

தூத்துக்குடி மாவட்டம்: சக்தி விநாயகர் கோவில், நாசரேத். கற்குவேல் அய்யனார் கோவில், தேரிக்குடியிருப்பு.

திருநெல்வேலி மாவட்டம்: வெங்கடாசலபதி கோவில், மேல திருவேங்கடநாதபுரம். முப்பிடாதி அம்மன் கோவில், சங்கரன்கோவில். பொருந்திநின்றபெருமாள் கோவில், தென்காசி.

கன்னியாகுமரி மாவட்டம்: ஆதிகேசவ பெருமாள் கோவில், திருவட்டார். நீலகண்டசுவாமி கோவில், பத்மநாபபுரம். மகாதேவர் கோவில், திற்பரப்பு.

கோயம்புத்தூர் மாவட்டம்: ஆஞ்சநேயசுவாமி கோவில், பாலாற்றங்கரை. மாரியம்மன், அங்காளம்மன் கோவில், பொள்ளாச்சி வட்டம். சங்கமேஸ்வரர் கோவில்,கோட்டை, கோவை.

திருப்பூர் மாவட்டம்: கந்தப்பெருமாள் கோவில், கொங்கணகிரி.  நீலாம்பூர் காளியம்மன் கோவில், கரையூர். வெற்றி வேலாயுதசுவாமி கோவில், ஊத்துக்குளி.

ஈரோடு மாவட்டம்: செல்லாண்டியம்மன் கோவில்,பெருந்துறை.

சேலம் மாவட்டம்: அங்காளம்மன் கோவில், கல்வடங்கம்.

நாமக்கல் மாவட்டம்: பாலசுப்பிரமணியசுவாமி கோவில், கபிலர்மலை. துலுக்க சூடாமணியம்மன் கோவில், புதுப்பட்டி.

கிருஷ்ணகிரி மாவட்டம்: வெங்கட்ரமண சுவாமி கோவில், கண்ணம்பள்ளி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை; உடுமலையில் பிரசித்தி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஓம் சகதி பராசக்தி ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar