திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ கருடசேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2024 12:04
சென்னை : சென்னை, திருவவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று கருடசேவை நடந்தது.
சென்னை, திருவல்லிக்கேணியில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் பார்த்தசாரதி பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், யோக நரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.உற்சவர் தெள்ளிய சிங்கராக, ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் சேவை புரிகிறார். இக்கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை மாதம், 10 நாள் பிரம்மோற்சவம் விமர்சையாக கொண்டாடப்படும். இந்தாண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலித்து வருகிறார். விழாவில் இன்று 25ம் தேதி கருடசேவை நடைபெற்றது. கருட வாகனத்தில் வலம் வந்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 29ம் தேதி நடைபெறுகிறது. 30ம் தேதி வெண்ணெய்த் தாழி கண்ணன் கோலத்தில் பல்லக்கு சேவை, மே1 ம் தேதி தீர்த்தவாரி உற்சவம், அன்று இரவு கண்ணாடி பல்லக்கு சேவை நடக்கிறது.