மேட்டுப்பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவிலில் அக்னி கம்பம் நடப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2024 11:04
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் மகா சக்தி மாரியம்மன் கோவிலில், அக்னி கம்பம் நடப்பட்டது. மேட்டுப்பாளையம் பங்களா மேட்டில், மகா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின், 14ம் ஆண்டு திருவிழா கடந்த, 16ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு அக்னி கம்பம் நடப்பட்டது. நாளை, திருவிளக்கு பூஜையும், 28ல் ராஜபுரத்தில் இருந்து கரகம், பூச்சட்டி எடுத்து வருதல், 30ல் அம்மன் அழைப்பும் நடைபெற உள்ளது. மே 1ம் தேதி பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள, சக்தி விநாயகர் , பால்குடம் எடுத்து வருதலும், மாவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. 2ம் தேதி மஞ்சள் நீராட்டும், 3ம் தேதி மறுபூஜையும் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு தினமும் இரவு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து வருகின்றனர்.