திருப்பதி; திருமலை பவித்ரோத்ஸவம் விழாவில் பெருமாளுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
பவித்ரோத்ஸவம் என்பது புனிதப் படுத்துதல் என்ற பொருளில் வரும் பெருமாளையே பவித்ரன் என அழைப்பார்கள். பூஜை செய்யும்போதும் சில சமயங்களில் தவறுகள் நடைபெறலாம் மந்திர உச்சரிப்புக்களிலும் தவறுகள் நேரிடலாம். இவைகளினால் ஏற்படும் தோஷங்களை நீக்கிப் பரிசுத்தம் அடையும் வண்ணம் செய்யப்படுவதே பவித்ரோத்ஸவம் ஆகும். இவ்விழாவானது திருமலையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் யாகசாலையில் ஹோமம் மற்றும் வேள்வி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன்பின் சம்பங்கி பிரகாரத்தில் ஸ்னபன திருமஞ்சனம் நடைபெற்றது. விழா நிறைவு நாளான நேற்று பூர்ணாஹுதி நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசுவாமி கோயிலின் நான்கு வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.