ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ 1.88 கோடி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஆக 2023 01:08
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ. 1.88 கோடி வருவாயாக கிடைத்துள்ளது. ராமேஸ்வரம் கோயிலில் 30 நாள்களுக்கு பின் ஆக.,29ல் கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதி முன்புள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகளை கோயில் ஊழியர்கள் சேகரித்தனர். இதனை கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் இணை ஆணையர் சிவராமகுமார் முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில் ரொக்க பணம் ரூ. 1 கோடி 88 லட்சமும், தங்கம் 125 கிராம், வெள்ளி 9 கிலோ 450 கிராம் காணிக்கையாக கிடைத்தது. காணிக்கைகளை கோயில் உதவி ஆணையர் பாஸ்கரன், கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், பேஸ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி, கோயில் ஊழியர்கள் பலர் எண்ணினார்கள்.