30 ஆண்டுக்குப் பின் சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2023 10:10
சேலம்; சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் முடிந்து, யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது. இன்று காலை கால யாகசாலை பூஜைகள் செய்யபட்டு, வேத மந்திரங்கள் முழங்க, புனித கலச நீர், மூலவர் விமானத்தில் உள்ள கலசத்தின் மீது ஊற்றப்பட்டு, 30 ஆண்டுக்குப் பின் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. அமைச்சர் நேரு, கலெக்டர், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் உட்பட தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.