Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலக்காடு பகவதி அம்மன் கோவிலில் ... பாடியநல்லுார் முனீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழா துவக்கம் பாடியநல்லுார் முனீஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனாதன வைதீக தர்மம் செழிக்கட்டும்; சிருங்கேரி பாரதீ மஹா சுவாமி அருளுரை
எழுத்தின் அளவு:
சனாதன வைதீக தர்மம் செழிக்கட்டும்; சிருங்கேரி பாரதீ மஹா சுவாமி அருளுரை

பதிவு செய்த நாள்

04 ஏப்
2025
10:04

திருப்பூர்; சிருங்கேரி ஸ்ரீ சாரதாபீடாதீச்வர ஜகத்குரு சங்கராச்சாரிய ஸ்ரீஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஷ்வாமிகளின், 75வது வர்தந்தி திருநாள் வைபவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


அதிருத்ர மஹாயாகம், ஸஹஸ்ரசண்டீ மஹாயாகம், வேத ஹவனம், பஞ்சாயதன தேவதா ஆராதனம் 1,000, 10,000, 75 லட்சம் மற்றும் கோடி எண்ணிகைகளில் மூலமந்திர ஜபங்கள் மற்றும் பாராயணங்கள் ஆகியன சிருங்கேரியில் மட்டுமல்லாமல், நம் நாட்டின் பிற பகுதிகளிலும், உலகில் பல்வேறு பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்படுகின்றன. அதே சமயத்தில், வேத-சாஸ்திர -புராண- இலக்கியங்களில் திறமை வாய்ந்தவர்களுக்கு வெகுமதி மற்றும் சன்மானங்களும் ஏழை, எளியவர்களுக்கு உதவிகள் வழங்கும் விழாக்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


இதை முன்னிட்டு, சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சார்யார் ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ மஹா சுவாமியின் அருளுரை: ஸ்ரீசாரதாம்பாளாகவே அருள் பாலித்துவரும் நம் குருவின் சேவையில் ஈடுபடும் மகத்தான அதிர்ஷ்டமும், பாக்கியமும் நம் அனைவருக்கும் கிடைத்துள்ளது. அதன் அருமையை புரிந்து கொண்டு, அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நம் பொறுப்பு. சாதாரண கல்லுக்கும், நவரத்தினத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரியாவிட்டால், சாதாரண கற்களின் குவியலில் இருந்து ரத்தினத்தை பிரித்துக் காட்ட முடியாது. நம் குருநாதரின் பெருமையை புரிந்து கொள்ள, அவரது மகிமையை தெரிந்து கொண்டு போற்றுவதற்கு, நாம் நம்மை தகுதியுடையவர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும். அனைவரின் துக்கங்கள் துாரமாகட்டும். ஹிந்து மதம் என்றழைக்கப்படும் நம் சனாதன வைதீக தர்மம் செழிக்கட்டும். அனைவரும் நலன்களை பெறட்டும்; சமுதாயமும், தேசமும் பெருமளவில் செழிக்கட்டும் என்று பிரார்த்தித்து, அனைவருக்கும் எங்களுடைய நாராயண ஸ்மரண பூர்வகமான ஆசிகளை வழங்குகிறோம். இவ்வாறு சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சார்யார் ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ மஹா சுவாமி அருளுரையில் குறிப்பிட்டுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமநாதபுரம்; உலகின் முதன் முதலில் தோன்றிய சிவன் கோயில் என்றழைக்கப்படும்  ராமநாதபுரம் மாவட்டம் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மருதமலை முருகன் கோவிலில் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், கோபுர ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் மூங்கில் காட்டில் பக்தர் ... மேலும்
 
temple news
கோவை; காட்டூர்பகுதியில் தொட்ராயன் கோவில் வீதியில் உள்ள மணி முத்து மாரியம்மன் கோவில் 49ம் ஆண்டு உற்சவ ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு நெம்மாரா நெல்லிக்குளங்கரை பகவதி அம்மன் கோவில் திருவிழா நேற்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar