மணி முத்து மாரியம்மனுக்கு ரூ 3 கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2025 10:04
கோவை; காட்டூர்பகுதியில் தொட்ராயன் கோவில் வீதியில் உள்ள மணி முத்து மாரியம்மன் கோவில் 49ம் ஆண்டு உற்சவ விழா கடந்த 25ம் கணபதி ஹோமத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. பூச்சாட்டு, அக்னி கம்பம் நடுதல் அம்மனுக்கு தங்க கவசம் அணிவித்தல்ஆகியன சிறப்பாக நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக இன்று வெள்ளிக்கிழமை ரூ 3 கோடி ரூபாய் மதிப்பில் தங்க நகைகள், 500, 200, 100 ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு, மூலவர் அம்மன் தங்கக்காப்பு கவசத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். வரும் 06ம் தேதி உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம், மகாதீபாரதனை நடைபெறுகிறது. தொடர்ந்து செவ்வாய் அன்று அம்மனை அழைத்தல், புதன்கிழமை கரக ஜோடனை, சுவாமி திருவிதி, உலா, மாவிளக்கு பூஜை ஆகியன நடைபெறுகிறது. வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.