Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயிலில் சிறப்பு பூஜையுடன் ... புதுப்பொலிவு பெற்ற ராமேஸ்வரம் உற்சவர் சன்னதி விமானம்! புதுப்பொலிவு பெற்ற ராமேஸ்வரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் கோவிலில் 10ம் நூற்றாண்டு.. மழைநீர் வடிகால் கண்டுபிடிப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2014
10:09

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், சிதம்பரம் நடராஜர் கோவிலில், பூமிக்கு அடியில், முறையான மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது, ஆய்வில் தெரியவந்துள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறை பேராசிரியர்கள், சிவராம கிருஷ்ணன், கலைச்செல்வன் மற்றும் ஆய்வு மாணவர்கள் சுசேந்திரன், ராஜராஜன், பிரபாகரன் ஆகியோர் கொண்ட குழு, கடந்த, ௧௮ம் தேதி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆய்வு செய்தது.

Default Image

Next News

சுட்ட செங்கல் : அப்போது, ஆயிரக்கால் மண்டபத்தின் கீழே, நிலவறை இருப்பது தெரியவந்தது. அதன் அமைப்பை ஆய்வு செய்தபோது, பருவமழைக் காலங்களில், கோவிலில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகாலாகவும் அது பயன்படுத்தப்பட்டது, தெரியவந்தது.மழைநீர் வடிகால், ஆயிரங் கால் மண்டபத்தின், மேற்கு பகுதியில் இருந்து, கோவிலின் நேர் வடக்கே உள்ள காளி கோவில் சிவப்பிரியை குளத்தை சென்றடைகிறது. இந்த கால்வாய், 1250 மீ., நீளத்தில், நிலமட்டத்தில் இருந்து, ௧,௧௯ மீ., ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ௭௭ செ.மீ., உயரம் மற்றும் ௬௩ செ.மீ., அகலத்தில் கால்வாயின் உள் அளவு உள்ளது. நன்கு அரைக்கப்பட்ட களிமண்ணால் உருவாக்கப்பட்ட சுட்ட செங்கற்களை பயன்படுத்தி உள்ளனர் என்பது, ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு செங்கல், 24 செ.மீ., நீளமும், 15 செ.மீ., அகலமும், 5 செ.மீ., கனமும் கொண்டதாக உள்ளது.செங்கற்களை இணைக்க சுண்ணாம்பு சாந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. 2 அடி அகலம், 5 அடி நீளம் கொண்ட பெரிய கருங்கல் பலகைகளை கொண்டு கால்வாயின் மேல்பகுதி மூடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கள ஆய்வாளர்கள் கூறியதாவது: தமிழகத்தை ஆட்சி புரிந்த சோழமன்னர்கள், கலை மற்றும் கட்டடக் கலைகள் மட்டுமல்லாமல், நீர் மேலாண்மையிலும், தனித்த கவனத்தை செலுத்தி உள்ளனர்.குறிப்பாக, கொள்ளிடத்தில் வரும் நீரினை, நேர் எதிர் திசையில் செலுத்தி, வீராணம் ஏரிக்கு கொண்டு வந்ததோடு அல்லாமல், அங்கிருந்து வெள்ளாற்றின் வழியாக, வடலுார் அருகே உள்ள வாலாஜா ஏரி வரை, 70 கி.மீ., தூரம் காவிரி நீரை கொண்டு வந்தனர்.இதனால், ௩0,000 ஏக்கர் விளைநிலங்கள் பயனடைந்தன. இதற்கு அவர்கள், ’பாம்பு போன்று வாய்க்கால் அமைத்தால், நீர் பனையேறும்’ என்ற நீர் மேலாண்மை விதியினை வகுத்து, அதன்அடிப்படையிலேயே, கொள்ளிடத்தின் குறுக்கே, வடவாற்றை அமைத்து, வடக்கு திசையில் நீரினை கொண்டு வந்து வீராணம் ஏரியில் சேர்த்து உள்ளனர்.

சோழர்கள் கண்டறிந்த அதே விதியினை அடிப்படையாகக் கொண்டே, பிற்கால மன்னர்களும் வீராணம் ஏரியில் இருந்து, வாலாஜா ஏரி வரை, காவிரி நீரினை கொண்டு வந்து உள்ளனர்.இந்த அற்புத விதியின் அடிப்படையில் தான், சிதம்பரம் நடராஜர் கோவிலில், மழைநீர் வடிகால் அமைக்கப் பட்டுள்ளது. கோவிலில் விழும் அதிகப்படியான மழை நீரை, 1,250 மீ., தூரம், எதிர் திசையில் கொண்டு சென்று, அதை வீணாக்காமல் தனி குளத்தில் சேகரித்து, நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சி போற்றத் தக்கது.

10 நுாற்றாண்டு :
இந்த கால்வாயின் கட்டுமான அமைப்பையும், அதன் தொழில்நுட்பத்தையும் பார்க்கும்போது, பிற்கால சோழர்கள் காலத்தில், அதாவது, கி.பி.,10 முதல் 13ம் நுாற்றாண்டுகளில் இந்த கால்வாய் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.இதுபோன்ற கால்வாய் அமைக்கும் திட்டம், 5,000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிக மக்கள் பயன்படுத்தி உள்ளனர்.தமிழர்களும் அதுபோன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளனர் என்பதற்கு இதுவே தக்க சான்றாக அமைந்து உள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி : பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா இன்று (மார்ச் 18) கொடியேற்றத்துடன் துவங்கியது.பழநி ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி முதல் நாள் விழாவில் தங்க பல்லக்கில் சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : நாட்டிலுள்ள பல புண்ணிய க்ஷேத்திரங்களில் விஜய யாத்திரை புரிந்து, இரண்டு ஆண்டுகளுக்குப் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாத கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் அங்காளம்மன் கோவிலில் பூ குண்டம் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar