Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் கோவிலில் பர்தா அணிந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடல் கடந்து சென்றாலும் மறக்காத பண்பாடு: பாரீசில் கோலாகலமாக நடந்த ஸ்ரீநிவாச திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடல் கடந்து சென்றாலும் மறக்காத பண்பாடு: பாரீசில் கோலாகலமாக நடந்த  ஸ்ரீநிவாச திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

25 அக்
2026
07:10

புதுச்சேரிக்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் இடையேயான பந்தம் பாஸ்போர்ட், நாடு, எல்லைகளையும் தாண்டிய, தொப்புள்கொடி உறவு. கடல்தாண்டி ஐரோப்பிய மண்ணில் குடியேறினாலும், அங்கிருக்கும் தமிழர்களின் நெஞ்சுக்குள் எப்போதுமே நம் ஊர் மணமும், குலதெய்வ வழிபாடும் தான் ஜீவநாடியாகத் துடித்துக்கொண்டிருக்கிறது.


பிரான்ஸ் வாழ் இந்து சமூகத்தினரின் நீண்ட நாள் கனவான அங்கே ஒரு பெருமாள் கோவிலை உருவாக்கும் உன்னதப் பணியை ‘ஸ்ரீ வெங்கடேவரா டெம்பிள் பிரான்ஸ்’ அமைப்பு முன்னெடுத்துள்ளது.


அதற்கு முன்னோட்டமாக, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபோகம் மிகப்பிரம்மாண்டமாகவும் பக்திப் பெருக்குடனும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.


திருப்பதி திருமலையில் இருந்து பிரத்யேகமாக வருகை தந்த அர்ச்சகர்கள், கடந்த நான்கு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் பக்தர்களின் மனதை உருக்கும் வகையில் திருக்கல்யாண வைபோகத்தை ஆகம விதிகளின்படி மிகச் சிறப்பாக நடத்தி வைத்தனர்.


மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, வேத மந்திரங்கள் முழங்க, மலர் மாலைகள் மாற்றப்பட... பாரீஸ் மாநகரமே ஒரு கணத்திற்கு திருப்பதியாக மாறியது.


பாரீஸ் நகரில் தற்போது நிலவிவரும் சவாலான மற்றும் பதற்றமான சூழலையும் பொருட்படுத்தாமல், பிரான்ஸ் வாழ் தமிழர்கள் குறிப்பாக, புதுச்சேரியை சேர்ந்தவர்கள், இந்தியாவின் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் 1500க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்தினருடன் திரளாகக் கலந்து கொண்டனர்.


விழாவில் புதிதாகத் திருமணமான தம்பதிகள் சிறப்பு முறையில் தரிசனம் செய்வதற்கான பிரத்யேக ஏற்பாடுகளையும் விழாக்குழுவினர் கச்சிதமாகச் செய்திருந்தனர்.


தமிழகம், புதுச்சேரியில் இருந்து கடல் கடந்து வந்த பிறகு, நமது பாரம்பரிய பண்பாடுகளை நாங்கள் ஒருபோதும் மறக்கவில்லை. ஆனாலும், திருப்பதி சென்று திருக்கல்யாணத்தை நேரில் காணும் வாய்ப்பு பலருக்கு அமைவதில்லை.


அதனால்தான், அயல்நாட்டிலும் நமது கலாசாரத்தை நிலைநிறுத்தும் முயற்சியாக இந்தத் திருக்கல்யாணத்தை நடத்தினோம். இந்தச் சவாலான சூழலிலும் விழா இவ்வளவு வெற்றிகரமாக நடந்தது எங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அந்த அமைப்பின் தலைவர் கண்ணபிரான் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


கண்ணபிரான் புதுச்சேரியை சேர்ந்த மண்ணின் மைந்தர் என்பது குறிப்பிடத்தக்கது. மண்ணை விட்டுத் துாரமாக இருக்கலாம்; ஆனால், மனதை விட்டு எப்போதாவது விலகுமா நமது பாரம்பரியம்..


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி மாத பவுர்ணமிக்கு மிகுந்த விசேஷம் உண்டு. சந்திரன், பூமிக்கு அருகில் வரும் நாட்களில் இதுவும் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பிராமணர்கள் குடும்பத்துடன் 300 ஆண்டுகளுக்கு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் தைலக்காப்பு உற்ஸவத்தில் நூபுர கங்கை தீர்த்தத்தில் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் பாதுகாப்பு மற்றும் ஆகம விதிகளின் அமலாக்கம் குறித்து, தீவிர விசாரணை ... மேலும்
 
temple news
மைசூரு: கர்நாடகாவின் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவில், 3,473 ட்ரோன்களைப் பயன்படுத்தி வானில் பிரம்மாண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar