Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகின் மிகப்பெரிய சிவலிங்கமான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
146 அடி உயர முத்துமலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
146 அடி உயர முத்துமலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

25 அக்
2026
11:10

சேலம்: ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் 146 அடி உயர முருகன் சிலை மற்றும் 61 அடி உயர ராஜகோபுரத்துக்கு இன்று புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


2015ல் பிரமாண்ட முருகனின் திருமேனி நிறுவ திட்டமிட்டு, 2016ல் திருப்பணி தொடங்கி, 2022 ஏப்., 6ல் கும்பாபிஷேகம் நடந்தது. விஸ்வரூப முருகனின் சிலை பக்தர்களை பிரமிக்க வைக்கிறது. மூலவர் முத்துமலை முருகன், புன்னகையுடன் கூடிய ராஜ அலங்காரத்தில், 6 அடி உயரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஒரு கையில் வேல், மற்றொரு கையில் ஆசீர்வாதம் செய்வது போன்று, பஞ்சவர்ண நிறத்தில் முருகன் காட்சி அளிக்கிறார். அவரது முகத்தை அருகில் சென்று பார்க்க நினைப்போர், பாலாபிஷேகம் செய்ய நினைப்போருக்கு, முருகன் வேலின் பின்புறம், லிப்ட் வசதி உள்ளது. முருகன் கையில் உள்ள வேலில் மற்றொரு வேலும் அமைக்கப்பட்டுள்ளது. பால், பன்னீர் அபிஷேகம் செய்பவர்களுக்கும் வசதிகள் உள்ளன. தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


இந்நிலையில் விஸ்வரூப முருகன் சிலைக்கு புதிதாக வண்ணம் தீட்டி, கோவில் கிழக்கு பகுதியில், 61 அடி உயரத்தில், 5 நிலை கொண்ட ராஜகோபுரம், 25 அடி உயர தங்க கொடி மரம், 6 அடியில் ஜோதிர்லிங்கம், அருணகிரிநாதர், இடும்பன் சிலை புதிதாக நிறுவப்பட்டு, இன்று காலை, 10:00 முதல், 11:00 மணிக்குள், மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.ெஹலிகாப்டரில் இருந்து பூக்கள் துாவப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்: உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் என, போற்றப்படும், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு, ... மேலும்
 
temple news
ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பிராமணர்கள் குடும்பத்துடன் 300 ஆண்டுகளுக்கு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் தைலக்காப்பு உற்ஸவத்தில் நூபுர கங்கை தீர்த்தத்தில் ... மேலும்
 
temple news
புதுச்சேரிக்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் இடையேயான பந்தம் பாஸ்போர்ட், நாடு, எல்லைகளையும் தாண்டிய, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar