Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெரூர் சதாசிவ பிரமேந்திராள் ... 146 அடி உயர முத்துமலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் 146 அடி உயர முத்துமலை முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகின் மிகப்பெரிய சிவலிங்கமான கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஷ்வரருக்கு அன்னாபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உலகின் மிகப்பெரிய சிவலிங்கமான கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஷ்வரருக்கு அன்னாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

25 அக்
2026
11:10

அரியலூர்: உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் என, போற்றப்படும், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு, இன்று அன்னாபிஷேகம் நடந்தது.


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ளது, கங்கைகொண்ட சோழபுரம். 11ம் நூற்றாண்டு முதல், 14ம் நூற்றாண்டு வரை, கடல் கடந்து பரந்து விரிந்திருந்த, சோழ பேரரசின் தலைநகராக விளங்கியது.


தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய, மாமன்னன் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன், தனது ஆட்சி காலத்தில் (கி.பி. 1012-1044), கங்கை கரை வரை படையெடுத்து சென்று, வடபுலத்து மன்னர்களை வெற்றி கொண்டதன் அடையாளமாக, கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய நகரை உருவாக்கி, அங்கு தஞ்சாவூர் பெரிய கோயில் வடிவமைப்புடன் கூடிய, பிரகதீஸ்வரர் கோவிலை கட்டினார்.இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள, 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்ட, சிவலிங்கம் தான், உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் என, போற்றி வணங்கப்படுகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில், கங்கைகொண்ட சோழபுரம் கோவில் கருவறை சுவரில் பதிக்கப்பட்டுள்ள சந்திரகாந்த கல், வெயில் காலத்தில் குளிர்ச்சியையும், மழை மற்றும் குளிர் காலத்தில் இதமான வெப்பத்தையும் வெளியிட்டு கொண்டிருக்கிறது.


ஐ.நா., சபையின், "யுனெஸ்கோ அமைப்பால், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், தொன்றுதொட்டு ஐப்பசி பவுர்ணமி நாளில் அன்னாபிஷேகம் நடைபெறும். அதன்படி, இன்று 1975 கிலோ  அரிசியை கொண்டு, கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில், சாதம் வடிக்கப்பட்டது.


காலை, 10:00 மணிக்கு துவங்கி, பிரமாண்டமான பாய்லர்களில் வடிக்கப்பட்ட சாதம் முழுவதும், பிரகதீஸ்வரருக்கு சாத்தப்பட்டது. சுவாமிக்கு மலர் மற்றும் பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேலம்: ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் 146 அடி உயர முருகன் சிலை மற்றும் 61 அடி உயர ராஜகோபுரத்துக்கு ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் ; சமயபுரம் அருகே காந்திநகர் வைத்தியபுரி நோய் நிவர்த்தி ஸ்தலமான மகா சித்தர் பீடத்தில் ... மேலும்
 
temple news
அன்னூர்: மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி ஆறாவது சனிக்கிழமை திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருமணிக்கூடம் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பிராமணர்கள் குடும்பத்துடன் 300 ஆண்டுகளுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar