Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) அர்த்தாஷ்டம சனி விலகியாச்சு! இனி எல்லாம் சுகமே!60/100 கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) வாங்கண்ணா! வணக்கங்கண்ணா! நல்ல சான்செல்லாம் தாருங்கண்ணா!80/100
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 நவ
2014
12:11

எதையும் சிந்தித்து பேசும் குணம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

உங்கள் பேச்சில் சாமர்த்தியம் காணப்படும். சனி பகவான் இது வரை உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்து 6-ம் இடமான விருச்சிக ராசிக்கு  செல்கிறார். அவர் ஐந்தில் இருக்கும் போது பல்வேறு இடையூறைக் கொடுத்திருப்பார். குறிப்பாக குடும்பத்தில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி  இருப்பார். கருத்துவேறுபாடு காரணமாக கணவன், மனைவி இடையே பிரிவு ஏற்பட்டு இருக்கும். இந்த நிலையில் தான் இப்போது சனி விருச்சி கத்தில் அடியெடுத்து வைக்கிறார். இங்கு நல்ல பணப்புழக்கத்தையும், காரியத்தில் வெற்றியையும் கொடுப்பார். அபார ஆற்றல் பிறக்கும். எதிரிகளை  இருக்கும் இடம் தெரியாமல் பயந்தோடச் செய்வீர்கள். மேலும் சனியின் 10-ம் இடத்துப்பார்வையும் சிறப்பாக அமையும். அதன் மூலம் அவர்  பொருளாதார வளத்தையும், காரிய அனுகூலத்தையும் தருவார். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார்.

2015ம் ஆண்டு நிலை குடும்பத்தில்மகிழ்ச்சி நிலைத்திருக்கும். வீட்டுக்கு தேவையான வசதி வாய்ப்பு அனைத்தும் கிடைக்கும். தம்பதியினர் இடை யே அன்யோன்யம் மேம்படும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். பல ஆண்டுகளாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி  நல்லமுறையில் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். குழந்தை பாக்கியம் விரைவில் கிட்டும். புதிய மனை வாங்கவோ, வீடு கட்டவோ  வாய்ப்புண்டாகும். சிலர் தற்போதுள்ள வீட்டை விட அதிக வசதி மிகுந்த வீட்டிற்கு குடிபுகுவர். வீட்டிற்கு அடிக்கடி உறவினர் வருகையும்,  அவர்களால் நன்மையும் கிடைக்கும்.பணியாளர்கள் கடந்த காலத்தில் இருந்த பிற்போக்கான நிலையில் இருந்து விடுபட்டு நிம்மதி காண்பர். ÷ வலையில் இருந்த வெறுப்புணர்வு மாறி ஆர்வம் பிறக்கும். பணியிடத்தில் திருப்தியும், தன்னம்பிக்கையும் பிறக்கும். வேலைப்பளு வெகுவாக  குறையும். புதிய பதவி வர வாய்ப்புண்டு. எதிர்பார்த்த சலுகை, விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கப் பெறுவர். தொழில், வியாபாரத்தில் புதிய முய ற்சியால் அதிக லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலாளர்களின் ஆதரவு சீராக கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்கள் நல்ல சம்பளத்தில்  பணிவாய்ப்பு கிடைக்கப் பெறுவர். சிலர் வேலை விஷயமாக வெளியூர், வெளிநாடு சென்று வருவீர்கள். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும்.  வாடிக்கையாளர்கள் உங்களின் மீது நன்மதிப்பு வைத்திருப்பர். அரசிடம் எதிர்பார்த்த உதவி அவ்வப்போது கிடைக்கும். கலைஞர்கள் பின்தங்கிய  நிலையில் இருந்து விடுபடுவர். புகழ், பாராட்டு வந்து சேரும். சக கலைஞர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் நீண்ட  காலமாக எதிர்பார்த்த பதவி வாய்ப்பு கிடைக்கப் பெறுவர். மக்கள் நலப்பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவர். மாணவர்கள் கல்வியில் ஆர்வமுடன்  ஈடுபடுவதால் நல்ல வளர்ச்சி பெறுவர். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். கலை, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம்.  வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பும் சிலருக்கு உண்டாகும். விவசாயிகள் முன்னேற்றமான பலனை காணலாம். விருப்பம் போல புதிய  சொத்துக்களை வாங்கலாம். மாற்றுப்பயிர் சாகுபடியால் அதிக ஆதாயம் கிடைக்கும். பெண்கள் முன்னேற்றம் அடைவர். புத்தாடை, நகை ஆபரண ங்கள் வாங்கலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள் உயர்நிலையை அடைவர். விருந்து, விழா என சென்று மகிழலாம். உடல்நலம் சீராக இருந்தா லும், அவ்வப்போது கேதுவால் பித்தம், மயக்கம் தொடர்பான உபாதை ஏற்படலாம். அக்கம்பக்கத்தினர் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும்.  உறவினர்களுடன் சேர்ந்து சுற்றுலா சென்று மகிழ்வர்.

2015 ஜூலை 4ல் குரு சிம்மத்திற்கு மாறுகிறார். இந்தக் காலத்தில் முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. உங்கள்  நிலையில் மாற்றம் ஏற்படும்.

2016ம் ஆண்டு நிலை
பொதுவாக எதையும் சற்று முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். கையில் பணப்புழக்கம் அதிகமாகும். அதே நேரம் செலவும்  அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அன்பு தொடரும். திருமணம் போன்ற சுபவிஷயத்தில்தடை உருவாகலாம். புதிய வீடு  வாகனம் வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. பணியாளர்களுக்கு கடந்த காலம்  போல் சலுகை கிடைக்க வாய்ப்பிருக்காது. உங்களுக்கு வர வேண்டிய பொறுப்பு தட்டிப் பறிக்கப்படலாம் கவனம். அதிகாரிகளிடம் அனுசரித்து ÷ பாவது நன்மையளிக்கும். தொழிலதிபர்கள், வியாபாரிகள் தொடர்ந்து சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். புதிய தொழிலை தொடங்க இது  உகந்த காலம் அல்ல. புதிய முயற்சிகளை இப்போதைக்கு கைவிடுவது நல்லது. கலைஞர்கள் சுமாரான வளர்ச்சி நிலையில் இருப்பர். விடாமுயற்சி  எடுத்தால் தான் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியிருக்கும். விவசாயிகள் உழைப்புக்கேற்ற ஆதாயம்  கிடைக்கப் பெறுவர். பெண்கள் ஆடம்பரத்தை தவிர்க்கவும். வீட்டுச்செலவில் சிக்கனத்தைப் பின்பற்றுவது நல்லது. கேதுவால் பொருள் விரயம்  வரலாம். உடல் ஆரோக்கியம் குறையலாம்.

2017 ஜூலை வரை இந்த காலத்தில் பொருளாதார நிலை வளர்ச்சிஅடையும். நீங்கள் எடுத்த முயற்சி நிறைவேறும். எந்த பிரச்னை வந்தாலும் எளிதில்  முறியடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில்  பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சிலர் சற்று முயற்சி எடுத்து புதிய வீடு கட்டுவர். அல்லது தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு  குடிபுகவும் வாய்ப்புண்டு. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி எளிதில் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர் வகையில் இருந்து வந்த  கருத்துவேறுபாடு மறையும். பணியாளர்களின் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். எதிர்பார்த்த புதிய பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில்  லாபத்துக்கு குறையிருக்காது சிலர் தொழில், வியாபாரம் விஷயமாக வெளியூர், வெளி நாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் அறிவை  பயன்படுத்தி முதலீடு இல்லாமல் முன்னேற வழிவகை காணுங்கள். அரசாங்க வகையில் இருந்த பிரச்னை மறையும். மாணவர்கள் சிறப்பான பலனை  பெறலாம். விரும்பிய கல்விநிறுவனத்தில் படிக்கும் வாய்ப்புண்டாகும். கலைஞர்கள் அரசிடம் இருந்து பாராட்டு, விருது போன்றவை கிடைக்கப்  பெறுவர். அரசியல்வாதிகள் தங்கள் பணியில் சிறப்படைவர். விவசாயிகள் புதிய சொத்து வாங்கி மகிழ்வீர்கள். விளைபொருளுக்கு நல்ல விலை  கிடைக்கப் பெற்று அதிக வருமானத்தைக் காண்பர். வழக்கு விவகாரத்தில் சாதகமான பலன் கிடைக்கும். பெண்கள் குதுõகலமான பலனை காண்பர்.

2017 டிசம்பர் வரை
கணவன்-மனைவி இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் பொறுமையுடன் விட்டு  கொடுத்துப் போவது நல்லது. சிலருக்கு வீட்டில் பொருள் திருட்டு போக வாய்ப்புண்டு. பணியாளர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போவது  நன்மைஅளிக்கும். சிலருக்கு விரும்பாத இட மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் சிலர் வேலை விஷயமாக வெளிநாடு சென்று  வருவீர்கள். மறைமுக எதிரிகளால் இடையூறு அவ்வப்போது வரலாம். புதிய முதலீடு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. கலைஞர்களுக்கு  விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது. மாணவர்கள் ஆசிரியர்களின்  அறிவுரையை கேட்டு நடக்கவும்.விவசாயத்தில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். பெண்கள்  குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.

பரிகாரப்பாடல்!

குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்படுதுயர் ஆயின எல்லாம்நிலந்தரம் செய்யும் நீள்விசும்பும் அருளும் அருளொடு பெருநிலம் அளிக்கும்வலம்  தரும் மற்றும் தந்திடும் பெற்றதாயினும் ஆயின செய்யும்நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்நாராயணா என்னும் நாமம்.

பரிகாரம்!

சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரக வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். ராகு, கேது அர்ச்சனை செய்வது நல்லது. பாம்பு புற்றுள்ள கோயிலுக்குச்  செல்லுங்கள். திருநாகேஸ்வரம், திருபெரும்பள்ளம் அல்லது காளகஸ்தி ஆகிய தலங்களுக்குச் செல்வது நன்மையளிக்கும். சனிக்கிழமை பெருமாள்  கோயிலுக்குச் சென்று வாருங்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பார்வேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: அரங்கநாத சுவாமி கோவிலில்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் நேற்று ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை;  மாட்டுபொங்கல் முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  உலகபுகழ் பெற்ற, தஞ்சாவூர் பெரியகோவிலில் பொங்கல் பண்டிகையான நேற்று (ஜன.14) மாலை, நந்தியம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோவிலில் குரோதி ஆண்டு தை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பழநி கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar