பழநி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா பெரியநாயகி அம்மன் கோயிலில் ஜன.26ல் கொடி கட்டி மண்டபத்தில் வள்ளி, தேவசேனா, முத்துக்குமாரசுவாமி எழுந்தருள்வார். அதன்பின் காலை 9:50 மணிக்கு மேல் காலை 10:30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற உள்ளது. அன்று இரவு புதுச்சேரி சப்பரத்தில் சுவாமி ரதவீதி உலா நடைபெறும். தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு ஜன.,31 ல் திருக்கல்யாணம் நடைபெறும். அன்று மாலை வெள்ளி தேரோட்டம் ரத வீதிகளில் நடைபெறும். பிப்.,1 ல் அதிகாலை 5:00 மணிக்கு தோளுக்கினியானில் சண்முக நதியில் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடைபெறும். மாலை 4:00 மணிக்கு தைப்பூசத் தேர் வடம் பிடித்து தேரோட்டம் ரதவீதிகளில் நடைபெறும். பிப்.,4 அன்று மாலை தெப்பத் தேர் திருவிழா நடைபெற்று அன்று இரவு கொடி இறுக்குதலுடன் திருவிழா நிறைவடையும். விழா நாட்களில் புதுச்சேரி சப்பரம், தந்த பல்லாக்கு, வெள்ளி ஆட்டுக்கடா,பெரிய தங்கமயில், காமதேனு, தங்க குதிரை, வெள்ளி யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். மேலும் பழநி கிரிவிதி குடமுழுக்கு விழா அரங்கத்தில் தைப்பூச கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.