பதிவு செய்த நாள்
23
ஏப்
2015
11:04
சிந்தாதிரிப்பேட்டை: ஆதிபுரீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. சிந்தாதிரிப்பேட்டையில், இந்து சமய அறநிலைய துறைக்கு உட்பட்ட, திரிபுரசுந்தரி உடனுறை ஆதிபுரீஸ்வரர் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நேற்று காலை 10:00 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, வாஸ்து சாந்தி, மிருத் சங்கிரகம், அங்குரார்ப்பணம், முதல் கால யாக பூஜை, ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலை 7:00 மணிக்கு, இரண்டாவது கால யாக பூஜை, ஹோமம், மகா பூர்ணாஹூதி யாத்ராதானம், கடம் புறப்பாடு, சாலாகார விமான கும்பாபிஷேகம், மூலவர் ஸ்தாபனாபிஷேகம் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, சுவாமிக்கு, சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தன.