கோயிலுக்குள் கொடிமரம் முன்பு தான் சாஷ்டாங்கமாக வணங்க வேண்டும். கொடிமரத்தின் முன்னே ஆண்கள் தலை, மோவாய், இருகைகள், இருதோள்கள், இரு முழந்தாள்கள் என எட்டுஉறுப்புகள் நிலத்தில் படுமாறும், பெண்கள் தலை, இருகைகள், இரு முழங்கால்கள் என ஐந்து உறுப்புகள் நிலத்தில் படுமாறும் வணங்க வேண்டும். ஆண்கள் வழிபடுவது அஷ்டாங்க நமஸ்காரம் என்றும், பெண்கள் வழிபடுவது பஞ்சாங்கநமஸ்காரம் என்றும் கூறப்படும். அஷ்டம் என்றால் எட்டு. பஞ்ச என்றால் ஐந்து.