Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோவிலில் சேஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெயர்ச்சியடைந்தார் சனீஸ்வர பகவான்; திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பெயர்ச்சியடைந்தார் சனீஸ்வர பகவான்; திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

பதிவு செய்த நாள்

06 மார்
2026
08:03

காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு காலை 8.24 மணிக்கு பெயர்ச்சியடைந்தார் திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடைபெற்றது.


புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்ட திருநள்ளாறு பிரசித்திபெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் கிழக்கு நோக்கி தனி சன்னதியில் சனிஸ்வபகவான் அனுக்கிரக மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறு சனிப்பெயர்ச்சிவிழா மிக விமர்ச்சியாக நடைபெறும். இன்று 6ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.24மணிக்கு ஸ்ரீசனீஸ்வரபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு சனிப்பெயர்ச்சி இடம் பெயர்ந்தார். முன்னதாக காலை நான்கு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் அதிகாலை சனி பகவானுக்கு விசேஷ அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை, அன்னதானம், மருந்துவ முகாம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டது.மேலும் ஆன்லைன் மற்றும் கட்டண டிக்கெட்இலவச தரிசனம் செய்யப்பட்டது.மேலும் 15 இடங்களில் டிக்கெட் கவுண்டர் மூலம் ரூ. 1000,ரூ.600, ரூ.300 தரிசனம் டிக்கெட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனம் நிறுத்திமிடத்திலிருந்து பக்தர்களை இலவச பேருந்து மூலம் கோவிலுக்கு அழைந்துவர நடவடிக்கை, வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு குடிநீர், பிஸ்கட்,அன்னதானம் வழங்க நடவடிக்கை,ஜெனரோட்டர் வசதிகள், நளன்குளத்தில் பக்தர்கள் குளிக்க ஷவர் வசதி செய்யப்பட்டுள்ளது.


மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் தரிசனம் செய்ய தன்னார்வலர்கள் மூலம் அழைத்துசெல்ல நடவடிக்கை, சனிப்பெயர்ச்சி அன்று கோவில் நடை திறந்திருக்கும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம், கோவிலை சுற்றி சுமார் 200 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்கணிக்க நடவடிக்கை, முக்கிய இடங்களில் பக்தர்கள் மெகா எல்.இ.டி.டிவி, மூலம் பகவானை தரிசனம் செய்ய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுச்சேரி,காரைக்கால் உள்ளிட்ட பகுதியிலிருந்து சுமார் 1200க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படவுள்ளனர். இது தவிர தன்னார்வலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்படவுள்ளனர். மேலும் நளன்குளத்தில் படகுகள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை இரண்டு இடங்களில் புறக்காவல் நிலையம்.8 கண்காணிப்பு கோபுரம், பக்தர்களுக்கு உதவும் வகையில் 10க்கு மேற்பட்ட இடங்களில் தமிழ்,ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழி பேசும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு அனைத்து இடங்களில் மின்விளக்கு அமைக்கப்பட்டு விழாகேலாமாக காணப்பட்டு வருகிறது. பக்தர்கள் எவ்வித சிரமம் இல்லாமல் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் இன்று சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை, ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வரும் மார்ச் 19 ஆம் தேதி உகாதி ஆஸ்தானத்தை ... மேலும்
 
temple news
குன்னூர்; அருவங்காடு ஐயப்பன் கோவிலில் 53வது ஆண்டு பிரதிஷ்ட தின விழாவையொட்டி நேற்று முன்தினம் ஐயப்பன் ... மேலும்
 
temple news
அவிநாசி; குப்பாண்டம்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவிலில் பொங்கல் மற்றும் பூச்சாட்டு விழா ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு மாளேகவுண்டன்பாளையத்தில் உள்ள குண்டத்து காளியம்மன் கோவிலில் தீமிதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar