Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெயர்ச்சியடைந்தார் சனீஸ்வர பகவான்; ... பாகூர் மூலநாதர் கோவிலில் சனி பெயர்ச்சி; பக்தர்கள் பரவச தரிசனம் பாகூர் மூலநாதர் கோவிலில் சனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நிம்மேலி விஸ்வநாதர் கோவிலில் சனி பெயர்ச்சி விழா; திரளான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
நிம்மேலி விஸ்வநாதர் கோவிலில் சனி பெயர்ச்சி விழா; திரளான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

06 மார்
2026
08:03

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் உள்ளது.  சனி பகவான் தனக்கு ஏற்பட்ட குஷ்யோகம் என்ற நோய் நீங்க வேண்டி இத்தலத்தில் சிவபெருமானை பூஜித்து கோவில் எதிரே உள்ள தீர்த்த குளத்தில் நீராடி நோய் நீங்கி நிம்மதியுற்றதால் இந்த ஊர் நிம்மதியூர் என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் நிம்மேலி என்று அழைக்கப்படுகிறது. இதனால் இத்தலத்தில் எள் தீபமேற்றி, எள் அன்னம் தானம் செய்து தன்னை பூஜிப்பவர்கள் மற்றும் பரிகாரம் செய்யும் பக்தர்களுக்கு பெயர்ச்சி காலங்களில் ஏற்படக்கூடிய சகல பாதிப்புகளையும் நிவர்த்தி செய்யக்கூடிய கிரகதிபதியாக சனி பகவான் திகழ்கிறார். இத்தகைய சிறப்புடைய கோவிலில் இன்று சனி பெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்றது. சனிப்பெயர்ச்சி முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு பரிகார ஹோமம் 7:30 மணிக்கு பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு சிவபெருமான் மற்றும் சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, ஜபம் நடந்தது. 8.24 மணிக்கு சனிப்பெயர்ச்சி மகாதீப ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் எள் தீபம் ஏற்றி, அர்ச்சனைகள் செய்து சிவபெருமானையும் சனீஸ்வர பகவானையும் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் இன்று சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை, ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் வரும் மார்ச் 19 ஆம் தேதி உகாதி ஆஸ்தானத்தை ... மேலும்
 
temple news
குன்னூர்; அருவங்காடு ஐயப்பன் கோவிலில் 53வது ஆண்டு பிரதிஷ்ட தின விழாவையொட்டி நேற்று முன்தினம் ஐயப்பன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar