Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி திருக்கல்யாண மகிமை! துளசியை எப்போதெல்லாம் பறிக்கக் கூடாது? துளசியை எப்போதெல்லாம் பறிக்கக் ...
முதல் பக்கம் » துளிகள்
அபயக்கரம் அருளும் ஆலிலைக் கண்ணன்!
எழுத்தின் அளவு:
அபயக்கரம் அருளும் ஆலிலைக் கண்ணன்!

பதிவு செய்த நாள்

05 பிப்
2016
05:02

திருமாலின் எட்டாவது அவதாரமான கண்ணன், பிறக்கும் முன்பிருந்தே அற்புதங்கள் பல செய்து அனைவரையும் தன்பால் ஈர்த்தவர். விளையாட்டுப்பிள்ளையாக கோபிகைகளோடு அவர் லீலைகள் பல புரிந்திருந்தாலும் மற்றவர்களைக் காப்பாற்ற, உற்றவர்களின் துயர் நீக்க அபயக்கரம் நீட்ட அவர் தவறியதே இல்லை. பக்தர்களின் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருள்புரிபவர் என்பதாலேயே பக்தவத்சலன், தீனதயாளான் என்றெல்லாம் அவர் புகழப்படுகிறார். பிறக்கும் முன்னே அற்புதம்: கண்ணன் என்ற ஒரு அவதாரம் மட்டுமே பிறக்கும் முன்னேயே தன்னை வெளிப்படுத்திக் கொண்ட அவதாரமாகும். கம்சனின் கொடுஞ்சிறையில் வாடி நின்றனர். தேவகியும் வசுதேவரும் தேவகி நிறை கர்ப்பம் பிறக்கப்போவது எட்டவாது குழந்தை அசரீரி வாக்குப்படி இக்குழந்தைதான் கம்சனைக் கொல்லும் அதனால் அந்தக் கொடியவன் சிறையில் காவலை பலப்படுத்திவிட்டு, அரண்மனையில் உறங்காமல் இருந்தான்.

தேவகியால் துயரத்தைத் தாளவே முடியவில்லை. இந்தக்குழந்தையும் கம்சனின் கொடுமைக்கு பலியாகப் போகிறதோ? எப்படி இதனைக் காப்பாற்றப்போகிறேன்? என்று யோசித்தப்படி இருந்தாள். வசுதேவரின் நிலையோ இன்னும் பரிதாபம் அப்போதுதான் பரந்தாமன் தன்னைப் பெறப்போகிறவர்களுக்கு அபயம். அளிக்க முடிவு செய்தார். அவர்களை மயக்கத்தில் ஆழ்த்தி தன்னைப் பற்றியும் அவர்கள் இனி செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் கட்டளையிட்டார். மனதின் மிகப்பெரிய பாரம் நீங்கியவர்களாக நிம்மதி அடைந்தனர். பெற்றோர் அதோடு தந்தையான வசுதேவருக்கு யமுனையை வழிவிடச் செய்ததும் மழையில் நனையாமல் ஆதிசேஷனைக் குடையாக வரச் செய்ததும் அவரது கருணைக்கு எடுத்துகாட்டுகள்.

கோகுலக்கண்ணன்: தாய் யசோதையைப் போல பேறு பெற்றவர். வேறு எவருமே இல்லை பெற்ற அன்னையாக தேவகி இருந்தாலும் குழந்தைக் கண்ணனின் குமிண் சிரிப்பையும் குறும்புகள் செய்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல விழிக்கும் அழகையும் காணக் கொடுத்துவைத்தவள் அந்தத் தாய் ஆனால் அவள் அந்தப் பேற்றை அடையும்முன் பல காலம் பிள்ளைப்பேறு வாய்க்காமல் ஏங்கினாள். அவளுக்கு மகனாக வந்து அவளது துயரையும் துடைத்தவன் யசோதா நந்தன். கோகுலத்தில் நடக்கும் இந்திர பூஜையை தடுத்து நிறுத்தி, கோவர்த்தன மலைக்கு பூஜை செய்ய வைத்தான். அதனால் கோபம் கொண்ட இந்திரன் மழையை ஏவி மக்களைத் துன்புறுத்திய போது, மலையையே குடையாகப் பிடித்து குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவர் அவரது அபயக்கரம் செய்த அற்புதங்களுள் அதுவும் ஒன்று. அது மட்டுமா? மாடு மேய்ப்பவர்கள். மாடுகள் மற்றும் கன்றுகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் தவித்தனர். கண்முன்னே நீர் இருந்தும் அதைப் பயன்படுத்த முடியாத நிலை காரணம் காளிந்தி என்ற பாம்பின் அகங்காரம் பொறுப்பாரா கண்ணன்? அகந்தை என்னும் இருளை அழித்து அருள் வெளிச்சத்தைப் பரப்புபவராயிற்றே அவர் அதனால் தனது சின்னஞ்சிறு பாதங்களை வைத்து காளிந்து மீது நடனமாடி அவனது ஆணவத்தை அழித்தார்.

காளிந்தியை அவர் கொன்று போடவில்லை. ஆனால் சகடாசுரனையும் பூதனையையும் கொன்றார் ஏன் அப்படி? சகடாசுரனும் பூதனையும் வஞ்சமே உருவாக கண்ணனை அழிக்க நினைத்தார்கள் இறைவன் மகிமையை உணர்ந்து அவரைச் சரணடையவில்லை காளிந்தி நற்பேறு பெற்றவன் இறைவனின் திருப்பாதம் பட்டதும் அவனது மமதை அழிந்து ஞானம் பிறந்தது அவன் இறைவனைச் சரணடைந்தான். அதனால் அவனது நஞ்சை மட்டும் எடுத்த பெம்மான் அவனுக்கு அபயப்பிரதம் அளித்தார். மதுராவில் கண்ணன்: கண்ணன் அவதாரம் செய்ததே கம்சனை அழிக்கத்தான் அதற்குண்டான காலம் வரும் வரை கோகுலத்தில் வாழ்ந்தார் அவர் அவரது கருணை என்னும் வெள்ளம் மதுரா நகரை நோக்கிப் பாய்ந்தது அங்கு வாழும் மக்களுக்கு கம்சனின் கொடுங்கோலிலிருந்து அபயம்அளிக்க விரும்பினார். மாயவன் அதோடு மிக முக்கியமான கடமையும் அவருக்கு இருந்தது. அதுதான் உக்கிரசேன மகாராஜாவை விடுவித்தல் அவர் வேறுயாருமல்லர், கம்சனின் தந்தைதான் அவர் பெற்ற தந்தையை சிறைப்படுத்தி அவருக்கு சொல்லொணாத துயரங்களை அளித்தவன் கம்சன் அதோடு வலுக்கட்டாயமாக தனக்குத்தானே முடி சூட்டிக்கொண்டவன் அவனது கொடுமையை அழித்து மக்களுக்கும். மன்னருக்கும் மட்டுமன்றி தன் தாய் தந்தையருக்கும் அருள் செய்தவர் கண்ணபிரான்.

அத்தனை அவதாரங்களும் எதிரிகளைக் கொன்று மக்களைக் காத்தனர் கண்ணனும் அப்படிச் செய்தார் ஆனால் அதே சமயம் போர்வீரர்கள். மிக அதிக எண்ணிக்கையில் மடிவதும் அதனால் அவர்கள் மனைவியர் விதவை ஆவதையும் குழந்தைகள் அனாதை ஆவதையும் கண்டு உருகினார். பரந்தாமன் அதனால்தான் ஜராசந்தனுடன் போரிடும் முறையை மாற்றி அழிவைத் தவிர்க்கக் கடலின் நடுவே துவாரகை என்னும் நகரை நிர்மாணித்து அங்கு தன் மக்களைக் குடியமர்த்தினார் வீரம் என்பது எப்போதும் யாரையாவது எதிர்ப்பது அல்ல. சமயம் வரும்போது விவேகமாகவும் இருப்பதே வீரம் என்பதை அவனது செயல் உலகுக்கு உணர்த்தியது. பாண்டவர்களும் கண்ணனும்: கண்ணன் என்னும் ராஜதந்திரி இல்லையென்றால் பாண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கவே முடியாது. அவர்கள் இறையருள் நிரம்பியவர்களாகவும் அடக்கம் வாய்மை, முதலிய பண்புகளைக் கொண்டிருந்தால்தான் இறைவன் கண்ணன் அவர்களுக்கு உதவினார். காண்டவப் பிரஸ்தமாக இருந்த முள்வனம் பாண்டவர்களுக்குக் கிடைத்தது. அவர்களை மனம் தளர விடாமல் உழைக்கச் செய்து அதனை இந்திரப்பிரஸ்தமாக ஆக்கக் காரணமாக இருந்தவர் கிருஷ்ணர் தர்மராஜர் ராஜசூய யாகம் செய்தார். அப்போது சிசுபாலனை வதைத்து அவையோர்க்கும் நாட்டு மக்களுக்கும் நல்வாழ்வை அளித்தார்.

சூதாட்டத்தைக் கண்ணன் தடுத்து விடுவானோ என்று பயந்தார். தர்மபுத்திரர் அதனால் கவுரவர்களும் பாண்டவர்களும் சூதாடும் அவைக்கு கண்ணன் வராமல் இருக்கவேண்டுமே என நினைத்தார் அவர் அந்த நினைப்பே இறைவனை அங்கு வரவிடாமல் செய்துவிட்டது. அதனால் பாண்டவர்கள் எல்லாவற்றையும் இழந்ததோடு பாஞ்சாலியையும் சேர்த்து இழந்தனர். நிறைந்த அவை முன் அன்னையாகப் போற்றப்பட வேண்டிய பாஞ்சாலி துகிலுரியப்பட்டாள் முதுபெரும் கிழவர்களான பீஷ்மர் துரோணாச்சாரியார் கிருபாச்சாரியார் என அனைவரும் கண்களை மூடிக்கொண்டார்களே அன்றி அநியாயத்தை எதிர்க்கவில்லை. என்ன செய்வாள் பாஞ்சாலி? கண்ணன் திருவடியே சரணம் என சரணாகதி அடைந்தாள். பாதுகாப்புக்காக கைகளால் பிடித்திருந்தசேலையைக்கூட விட்டுவிட்டு கண்ணா! அபயம்! கண்ணன் அபயம் என்று கதறினாள். பொறுப்பாரா கிருஷ்ணர்? அபயம் என்று சரணடைந்தவர்களைக் காப்பாற்றுவதுதானே கண்ணனின் தர்மம் அதனால் சேலையை வளரச் செய்து துரோபதைக்கு கருணை காட்டினார் பெண்ணின் மானம் காக்கப்பட்டது. இது ஒரு முறை மட்டுமா துரோபதைக்குக் கண்ணன் அபயம் அளித்தார்.? இல்லை! காட்டில் வாழும்போது சூரிய பகவானை வேண்டி அட்சயப் பாத்திரம் பெற வைத்தார். அட்சயப் பாத்திரத்தைக் கழுவிக் கவிழ்த்த பிறகு அன்று முழுவதும் அது அன்னம் கொடுக்காது.

இதைப் பயன்படுத்திக் கொண்டு பாண்டவர்களை அழிக்க நினைத்த வஞ்சக சகுனி, துர்வாசரை அனுப்பி வைத்தான். அப்போது அந்தப் பாத்திரத்தில் ஒட்டியிருந்த ஒரு பருக்கை உணவையும் சிறு கீரைத் துண்டையும் உண்டு துர்வாசரின் வயிறு நிறையச் செய்து பாண்டவர்களைக் காப்பாற்றினார். அந்தச் செயலினால்தான் அட்சயதிருதியை என்னும் நன்னாள் உலகுக்குக் கிடைத்தது. அர்ஜுனனும் கண்ணனும்: நர நாராயணர்களாக இருந்தவர்களே அர்ஜுனனும், கண்ணனுமாகப் பிறந்தனர். என்று பாகவதம் சொல்கிறது. இருவருக்குள்ளும் அப்படிப்பட்ட பாவம் நிறைந்திருந்தது. கண்ணன் சொன்ன வழியிலேயே சென்று வெற்றிகளைக் குவித்தவன் அர்ஜுனன் சுபத்திரையைத் திருமணம் செய்து கொள்வதில் தொடங்கி அனைத்தும் கண்ணன் அருளாலேயே கிடைக்கப் பெற்றவன் அவன். மகாபாரத யுத்தம் தொடங்கும் முன் பாசுபதாஸ்திரம் என்னும் அஸ்திரத்தைப் பற்றிச் சொல்லி, அதை அடையும் முறையையும் எடுத்துக் கூறியதால் கடுந்தவம் செய்து சிவனிடமிருந்து அந்த அஸ்திரத்தைப் பெற்றான். அர்ஜுனன் அதனாலேயே யாராலும் வெல்லமுடியாதவன் என்ற பெயரையும் பெற்றார். யுத்தத்தின் போது அர்ஜுனனின் தேரோட்டியாக அமர்ந்தான் பரந்தாமன் கண்ணபிரான் இல்லையென்றால் கர்ணனின் நாகாஸ்திரம் அர்ஜுனனின் தலையைக் கொண்டு போயிருக்கும் அதுமட்டுமா? மிகவும் சக்தி வாய்ந்த பல அஸ்திரங்களிலிருந்து அர்ஜுனைக் காத்தது கண்ணன் தான்.

இப்படி ஒவ்வொரு முறையும் தனது பக்தர்களின் துயரைத் துடைக்க ஓடிவருபவன் கண்ணன். மகாபாரதத்தை நாம் ஊன்றிப்படித்தால் நமக்கு வாழ்க்கையின் தத்துவம் ஓரளவு புரியும். இறைவனான கண்ணபிரான் சாரதியாக தேரோட்டியாக அமர்ந்தாரே தவிர தானே போர் செய்ய முன்வரவில்லை ஏன் என்ன காரணம்? இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் கடமை என்று ஒன்று. உண்டு அதை எப்படிச் சிறப்பாகச் செய்யவேண்டும் என்பதற்கான பாதையைக் காட்டுவதுதான் கடவுளின் பணி அனைத்து செயல்களையுமே அவரே செய்யவேண்டும். என்று எதிர் பார்க்கக்கூடாது. என்பதை உணர்த்தவே கண்ணன் சாரதியாக வழிகாட்டியாகச் செயல்பட்டார். அப்படியானால் சிலர் கேள்வி எழுப்புவர் அனைத்துமே நாமே செய்துகொள்ள வேண்டுமானால் இறைவன் எதற்கு? அவனது செயல் என்ன? என்று கேட்பார்கள். அதற்கும் பதில் கீதையில் சொல்கிறார் கிருஷ்ணர் நம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளும் செய்து முடித்து விட்டு இனி எல்லாம் உன் செயல் என்று சொல்லும் பக்குவத்தை ஏற்படுத்திக்கொள்ளவே கடமையைச் செய் பலனை என்னிடம் விட்டுவிடு என்று சொல்கிறார் பகவான். பல சமயங்களில் நம்மை மீறி சில விஷயங்கள் சென்றுவிடும். அப்போது இறைவனைத் தவிர யாரும் துணையில்லை. என்று நம்பி அவனை முழுமையாகச் சரணடைய வேண்டும். இதைத்தான் பாஞ்சாலியின் சரணாகதியால் உணர்த்துகிறார் கிருஷ்ணர்.

கண்ணன் என்னும் தெய்வ வடிவம் பல தத்துவங்களை உள்ளடக்கிய வடிவம் மக்களுக்கு அபயக்கரம் நீட்டி அவர்களது அறியாமையை தனது ஞான சுதர்சனத்தால் நீக்குபவர் கிருஷ்ண பரமாத்மா அவரைச் சரணடைந்தவர்களுக்கு வாழ்வில் துன்பம் என்பதே இல்லை. அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது என்பது தூய பக்தியை மட்டுமேதான் வெள்ளை மனமும், தவறாத கடமையும் செய்தாலே ஓடி வந்து உதவுவார் ஜனார்த்தனர். கிருஷ்ண ஜெயந்தி அன்று நாம் நம் மனதில் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைத் துறந்து இறைவனைச் சரணடைவோம். அவரது அபயக்கரம் அருளும் கருணைக்கு நம்மை ஆட்படுத்திக் கொள்வோம். எங்கும் நிறைந்திருக்கும் கண்ணனின் கருணை வெள்ளம் நம் ஆன்மாவையும் குளிரச்செய்யட்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்.

வசுதேவர் பெற்ற மகனே! கம்சனையும், சாணூரனையும் அழித்தவனே!
அன்னை தேவகியை ஆனந்த மழையில் நனையச் செய்தவனே!
பகவத் கீதையை அருளிச் செய்து உலகுக்கே குருவானவனே!
உன் தாமரைப் பாதங்களே சரணம்! சரணம்! சரணம்!

 
மேலும் துளிகள் »
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar