Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமை ... அபயக்கரம் அருளும் ஆலிலைக் கண்ணன்! அபயக்கரம் அருளும் ஆலிலைக் கண்ணன்!
முதல் பக்கம் » துளிகள்
மதுரை மீனாட்சி திருக்கல்யாண மகிமை!
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி திருக்கல்யாண மகிமை!

பதிவு செய்த நாள்

03 பிப்
2016
04:02

இருமைப்பண்பு இல்லாமல் உலகமே இல்லை. தனித்து சாதனை படைப்பது என்பது நடக்காத ஒன்று. நடந்தாலும் அதனால் பயனேதும் இல்லை. ஒரு செயல் நடக்க இரண்டின் சேர்க்கை அவசியமாகும் என்பதே திருக்கல்யாண தத்துவம். மின்சார சக்தியை ஆராய்ந்து பார்த்தால் அதனுள் இருவித சக்திகள் இருப்பதை அறியலாம். ஒன்று பாசிடிவ், மற்றொன்று நெகடிவ். இவ்விரு ஆற்றலும் இணைந்தே மின்சக்தி உண்டாகிறது. இதைப் போன்று உலகம் அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் பேராற்றலை சக்தி, சிவம் என்றழைக்கிறோம். சிவம் சக்தியோடு சேர்ந்து விளங்கினால் உலகவுயிர்களும் ஆண், பெண் தன்மையில் கூடி மகிழும். இறைவன் இன்புற்றிருப்பது உயிர்களின் நலத்திற்காகவே, மீன் தான் இடும் முட்டைகளை கண்ணால் பார்க்க முட்டை பொரித்து குஞ்சாவது போல, மீனாட்சியம்மையின் கடைக்கண் பார்வையால் உலகவுயிர்கள் நற்கதி அடைகின்றன. தேவி இறைவனை விட்டு என்றும் நீங்காத தன்மை கொண்டவள். பாலில் சுவை போலவும், தீயில் நெருப்பு போலவும், மணியில் ஒளி போலவும் உறைபவள். அர்த்த நாரீஸ்வரராக தோன்றிய போது இறைவனில் சரிபாதி பெற்ற பெருமையுடையவள். மலையத்துவஜ பாண்டியனின் மகளாக தோன்றி தவம் இயற்றி, அந்த பரமனையே கணவராக அடைந்தாள். அம்மையின் அருந்தவத்திற்கு இறைவன் மகிழ்ந்து, காட்சி கொடுத்து, அவளைத் திருமணம் செய்து கொண்டதை மீனாட்சி திருக்கல்யாண திருவிழா நினைவுறுத்துகிறது.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான ... மேலும்
 
temple news
கோவில் வரலாறு 108 திவ்ய தேசங்களில் அமர்ந்த, நின்ற, சயன என மூன்று கோலத்திலும் அருள்புரிபவர் பெருமாள். இந்த ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar