மனிதர்கள் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் கணிப்பது போல கடவுளர்க்கும் ஜாதகம் உண்டு. ஆவணியில் பிள்ளையார் அவதரித்த நாளையே விநாயக சதுர்த்தியாக கொண்டாடி மகிழ்கிறோம். முதற்கடவுள் என்பதால் விநாயகரின் ஜாதகத்தை எல்லாருமே வழிபாடு செய்து வரலாம். இவரது ஜன்ம நட்சத்திரம் அஸ்தம் என்பதால் விநாயகர் கன்னிராசிக்கு உரியவராகிறார். இவருடைய ஜாதகத்தில் கடகத்தில் குருவும், மகரத்தில் செவ்வாயும், கன்னியில் புதனும் உச்சபலத்துடன் அமர்ந்துள்ளனர். சூரியன் தன் சொந்த வீடான சிம்மத்தில் ஆட்சிபலத்துடன் இருக்கிறார். செவ்வாய்க்குரிய விருச்சிகம் இவருடைய லக்னம். விநாயகரின் ஜாதகத்தை பூஜித்து வந்தால் நல்லறிவு உண்டாகும். வாழ்வில் குறுக்கிடும் தடங்கல் அனைத்தும் நீங்கும். வியாபாரம் அபிவிருத்தி பெறும். உத்திராட நட்சத்திரத்துக்கு இவர் அதிதேவதை என்பதால், இந்த நட்சத்திரத்தினர் இவரை தினமும் தவறாமல் வழிபட வேண்டும்.