Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாவளம் காளியம்மன் கோவிலில் மயான ... திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோத்சவ கொடியேற்றம் திருத்தணி முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மைக்காக 1,008 ஹோம குண்டத்துடன் மகா சுதர்ஷன யாகம் துவக்கம்
எழுத்தின் அளவு:
உலக நன்மைக்காக 1,008 ஹோம குண்டத்துடன் மகா சுதர்ஷன யாகம் துவக்கம்

பதிவு செய்த நாள்

20 பிப்
2026
11:02

ஆதம்பாக்கம்: உலக நன்மைக்கு முதல் முறையாக, 1,008 ஹோம குண்டங்களுடன், இரண்டு நாள் மஹா சுதர்சன யாகம் நேற்று துவங்கியது.


உலக நன்மைக்காக மஹா சுதர்சன ஹோமத்தை, ஆதம்பாக்கம், கே.ஆர்.ஜெ., கார்டனில், ஸ்ரீரங்கம் ஆண்டவன் பெரியாசிரம பீடாதிபதி வராஹ மஹாதேசிக ஆண்டவன் சுவாமிகள் துவக்கி வைத்து, அருளாசி வழங்கினார். இந்நிகழ்வில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, ஆண்டவன் சுவாமிகளிடம் ஆசி பெற்றார். வார்டு கவுன்சிலர் பூங்கொடி ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


சுதர்சன மஹா யாக கமிட்டி ஸ்தாபகர் கே.ஆர்.ஜெகதீசன் கூறியதாவது: பாலாஜி பட்டாச்சாரியாரின் எட்டு ஆண்டு முயற்சிக் குப்பின், உலக அளவில் முதன்முறையாக ஒரே இடத்தில், 1,008 ஹோம குண்டங்கள் அமைத்து, மஹா சுதர்சன யாகம் நடத்தப்படுகிறது. இதற்காக, 1,008 கிலோ நெய், 8,000 கிலோ திரவியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த யாகத்தை, 1,008 பட்டாச்சாரியார்கள் நடத்துகின்றனர். யாகத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு யாக ரக்‌ஷை, 25,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இவ்வாறு கூறினார். இன்று அதிகாலை கோ பூஜைக்கு பின், காலை 7:00 மணி முதல் மஹா சுதர்சன ஹோமம் துவங்குகிறது. பின், மஹா பூர்ணாஹுதி, சிறப்பு தீபாராதனை என, இரவு 8:00 மணிவரை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், ராம்லல்லாவின் தரிசனம் பெறுவதற்காகப் பெருந்திரளான ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar