Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொல்லாப்பிள்ளையார் ... பிள்ளையார் வழிபாட்டின் பலன்கள்! பிள்ளையார் வழிபாட்டின் பலன்கள்!
முதல் பக்கம் » சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு!
பிள்ளையாரின் பிற வடிவமும் சிறப்பும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2011
03:08

இடையாற்று மங்கலம் சித்தி விநாயகர்: திருச்சி அன்பில் சாலையில் உள்ள லால்குடியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது இடையாற்று மங்கலம். இங்குள்ள மாங்களீஸ்வரர் ஆலயத்தின் மேற்கு பிராகாரத்தில் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார் சித்தி விநாயகர். இவரை வணங்குவதால் எப்பேர்ப்பட்ட காரியங்களும் தாமதமின்றி சுபமாக முடியும் என்பது நம்பிக்கை.

கோவை கௌரி விநாயகர்: கோவை பொள்ளாச்சி சாலையில், கோவையிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ள ஈச்சனாரியில் உள்ளது மகாலட்சுமி மந்திர். இந்த ஆலயப் பிராகாரத்தின் தென் மேற்கு மூலையில் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார் கௌரி விநாயகர். மங்கையர் கோரிக்கைகளை மளமளவென நிறைவேற்றித் தருவதில் கௌரி விநாயகர் வல்லவர்.

திருச்சி ராஜ விநாயகர்: திருச்சி அருகே உள்ள கே.கே. நகர் செல்லும் சாலையில் முருகவேல் நகரில் உள்ளது ராஜ விநாயகர் ஆலயம். இப்பகுதி கன்னிப் பெண்கள் தங்களுக்கு விரைந்து திருமணம் நடக்க வேண்டிக்கொள்வது இந்த ராஜ விநாயகரைத்தான். தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் உரித்த தேங்காய்களை இவருக்கு மாலையாக அணிவித்து தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

திருச்செந்துறை வல்லப கணபதி: திருச்சி கரூர் நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள திருச்செந்துறை தலத்தில் அமைந்துள்ளது சந்திரசேகரசுவாமி ஆலயம். இந்த ஆலயத்தில் அர்த்தமண்டப நுழைவாயிலில் தனது மடியில் வல்லபையை அமர்த்தியபடி காட்சி தருகிறார், வல்லப கணபதி. கணவன் மனைவி ஒற்றுமையைக் காக்கும் காவலனாக இவர் விளங்குகிறார்.

உறையூர் வலம்புரி விநாயகர்: திருச்சி உறையூரில் உள்ளது செல்லாண்டியம்மன் ஆலயம். இந்த ஆலய பிராகாரத்தின் தென்கிழக்கு மூலையில் பல நூற்றாண்டுகளைக் கடந்த அரசமரமும் வேம்பும் இணைந்து தல விருட்சங்கள் உள்ளன. இவற்றின் அடியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் வலம்புரி விநாயகர். கல்விச் செல்வம், பொருட்செல்வம், நிம்மதியான வாழ்வு தருவதில் இந்த வலம்புரி விநாயகருக்கு நிகரில்லை என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வரதம்பட்டு வலம்புரி விநாயகர்: சீர்காழி திருப்பனந்தாள் பேருந்துத் தடத்தில் உள்ள திருவாளபுத்தூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள வரதம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ளது பிரத்யட்சநாத சுவாமி ஆலயம். இங்கு கிழக்கு பிராகாரத்தில் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார் வலம்புரி விநாயகர். கேட்டதைக் கொடுக்கும் வல்லமை இந்த வலம்புரி விநாயகருக்கு உண்டு என்று சொல்கின்றனர் பலன் பெற்ற பக்தர்கள்.

கொரநாடு தாகம் தீர்த்த விநாயகர்: சோழமன்னன் தஞ்சையை ஆண்ட காலத்தில் நாட்டு மக்களின் தண்ணீர்த் தேவையை நிறைவேற்ற கொரநாட்டில் நீர்த்தொட்டியைக் கட்டினான். ஊர் மக்கள் தங்கள் பங்குக்கு அதனருகே ஒரு பிள்ளையாரை பிரதிஷ்டை செய்தனர். தண்ணீர்த் தொட்டி எங்கே உள்ளது என்று கேட்கும் பயணிகளுக்கு தொட்டியை இந்தப் பிள்ளையார் அடையாளம் காட்டுவார் என்ற நம்பிக்கையால் அவர் தாகம் தீர்த்த விநாயகர் என்றே அழைக்கப்படலானார்.

திட்டச்சேரி நர்த்தன விநாயகர்: தஞ்சை மாவட்டம் அணைக்கரையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது திட்டச்சேரி. இங்குள்ள விசுவநாதர் ஆலயத்தின் அர்த்த மண்டப நுழை வாயிலின் இடதுபுறம் அருள்பாலிக்கிறார் நர்த்தன விநாயகர். கல்விச் செல்வத்தை வாரி வழங்குவதில் இவர் வல்லவர் என்பதால், மாணவ மாணவியரின் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறார்.

ஈச்சனாரி விநாயகர்: கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 10வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது ஈச்சனாரி விநாயகர் கோயில். இங்குள்ள மூலவர் சிலையை பேரூர் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக மதுரையில் இருந்து கொண்டு வந்தனர். வழியில் வண்டியின் அச்சு முறிந்து தற்போது கோயில் இருக்கும் இடத்தில் நின்றுவிட, எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டும் வண்டியை நகர்த்த முடியவில்லை. பின்னர், விநாயகர் இவ்விடத்திலேயே இருக்க விரும்புகிறார் என எண்ணி அங்கேயே கோயிலை நிர்மாணித்தனர். ஈச்சனாரி எனும் இடத்தில் வாசம் செய்வதால் ஈச்சனாரி விநாயகர் என்றே இவர் அழைக்கப்படுகிறார். கோவையில் புதிதாக வாகனங்களை வாங்குவோர் தங்கள் வாகனங்களுக்கு முதல் பூஜை போடுவது இங்குதான் என்பது சிறப்பம்சமாகும். இங்குள்ள விநாயகர் சிலை பெரியதாக இருப்பதால், அவசர வேலையாக இச்சாலை வழியாகச் செல்லும் பக்தர்கள் வாகனத்தில் இருந்தபடியே வணங்கிச் செல்கின்றனர். தினமும் காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமமும், இரவு 7 மணியளவில் தங்கரதத்திலும் சுவாமி உலா வருதலும் நடைபெறுகிறது. விநாயகர் சதுர்த்தி, தமிழ்ப் புத்தாண்டு போன்ற விழாக்கள் இங்கு வெகு விமர்சையாக நடைபெறுகிறது. காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தரிசனத்திற்குத் திறந்திருக்கும்.

கல்வி விநாயகர்: கோவை சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி கோயிலில் வடக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிப்பவர் கல்வி விநாயகர். இத்திருக்கோயில் திருப்பணிகளில் முக்கியப் பங்கு வகித்தவர் கிருபானந்த வாரியார் சுவாமிகள். அவருடைய நீண்டநாள் ஆசையில் உருவானதுதான் கல்வி விநாயகர் கோயில். அருகேயுள்ள ஊரைச் சார்ந்த பள்ளி மாணவர்கள் இவரை தரிசிப்பது தினசரி நிகழ்வாகும். தேர்வுக்குமுன் ஹால் டிக்கெட்டை விநாயகப் பெருமானின் பாத கமலங்களில் வைத்து பூஜித்து எடுத்துச் செல்கின்றனர். தேர்ச்சி அடைந்த பின்பு தங்கள் நன்றியை சிதறுதேங்காய் உடைத்தும், விநாயகருக்கு அபிஷேகம் செய்தும் நிறைவேற்றுகின்றனர்.

பஞ்சமுக விநாயகர்: கோவை மருதமலையில் முருகன் கோயிலுக்கு அருகில் அரசு, வேம்பு, குரகட்டை, கல்இஞ்சி, வக்கனை ஆகிய மரங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து வளர்ந்திருக்கின்றன. இம்மரத்தடியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பவர் தான் பஞ்சமுக விநாயகப் பெருமான். ஐந்து முகங்கள் ஒரே வரிசையில் அமைந்திருப்பதும், வலம்புரி இடம்புரி துதிக்கைகள் இருப்பதும் சிறப்பு அம்சமாகும். பஞ்சமுக விநாயகர் பஞ்ச விருட்சத்தின் கீழ் அருள்பாலிக்கும் காட்சி எங்கும் காணக் கிடைக்காத ஒன்றாகும். இந்த விருட்சத்தின்கீழ் அமர்ந்து தியானம் செய்யும்போது இதன் காற்று பல்வேறு பிணிகளைத் தீர்க்கும் வல்லமை பெற்றது எனவும்; பாம்பாட்டி சித்தர் உள்பட பல்வேறு முனிவர்களும் சித்தர்களும் இங்கு தவம் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. முருகனுக்குரிய விழா தினங்களிலும்; விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி நாட்களிலும் பஞ்சமுக விநாயகருக்கு சிறப்பு பூஜை ஆராதனைகள் வெகுவிமர்சையாக நடைபெறுகிறது.

ரத்தின விநாயகர்: திருக்கோயில் இல்லாத திருவிலூரும் ஊரல்ல அடவிகாடே என்பது அப்பர் அடிகளின் திருவாக்கு. அதற்கு ஏற்ப கோவையின் முக்கிய பகுதியாக விளங்கும் ரத்தின சபாபதிபுரம் (ஆர்.எஸ்.புரம்) திவான் பகதூர் சாலையில் எழிலுற அமைந்துள்ளது ரத்தின விநாயகர் கோயில். 1948 ஆம் ஆண்டு ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தியன்று மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். அறநிலைய ஆட்சித்துறைக்கு உட்பட்ட கோயில்களில் மிகத் தூய்மையான கோயில் எனத் தேர்வு செய்யப்பட்டு வெள்ளிக் கோப்பை விருது பெற்று பெருமை சேர்த்துள்ள கோயில் இது. ஞான சம்பந்தர், சுந்தரர், சேக்கிழார், மாணிக்கவாசகர் போன்றோரின் சுதைச் சிற்பங்களை அமைத்து, அவர்களைப் பற்றிய குறிப்புகளை கல்வெட்டில் பொறித்துள்ளனர். அத்துடன், வாழ்வியலுக்குத் தேவையான ஏராளமான கருத்துகளை கோயில் முழுவதும் எழுதியும் வைத்துள்ளனர். ரத்தின விநாயகர், கற்பக விநாயகர் மற்றும் ஞான விநாயகர் என தனித்தனி சன்னதிகளில் மூன்று விநாயகர்கள் இங்கு அருள்பாலிப்பது தனிச் சிறப்பு.

வெள்ளி விநாயகர்: கோவை இடையர் வீதியில் கூப்பிடு விநாயகர் கோயில் அமைந்துள்ளது. பக்தர் ஒருவரின் கனவில் தோன்றி, தான் இருக்கும் இடத்தைக் குறிப்பிட்டு, அங்கு சென்று அவரால் எடுத்து வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரகம் தான் மூலவர். அப்பகுதி மக்களைக் கூப்பிட்டு வரம் அருள்வதால் கூப்பிடு விநாயகர் என ஆரம்பத்தில் அழைக்கப்பட்டார். நாளடைவில் அவருக்கு வெள்ளித் தகட்டில் கவசம் உருவாக்கப்பட்டு சாற்றப்பட்டதால் வெள்ளி விநாயகர் என்றே தற்போது அழைக்கப்படுகிறார். இருநூறு வருடங்கள் பழமையான கோயில். ஆங்கிலேயர் காலத்தில் இப்பகுதி கலெக்டர் இக்கோயிலை அகற்ற ஆணையிட்டாராம். அன்றிரவு அவரது கனவில் தோன்றி அவரை எச்சரிக்க, அத்திட்டத்தைக் கைவிட்டதுடன் விநாயகப் பெருமானின் பரம பக்தராகவும் அந்த கலெக்டர் மாறிவிட்டாராம். கார்த்திகை பவுர்ணமியில் நடைபெறும் அன்னாபிஷேகம் சிறப்புமிக்க விழாவாகும். விநாயகர் சதுர்த்தி விழா இங்கு பத்து நாட்கள் கொண்டாடப்படும் பெரும் விழா. பக்தர்களின் குறைகளைத் தீர்த்து குறைவில்லா வரம் அருள்கிறார் என்பதற்கு, இவரை தினந்தோறும் வழிபடவரும் பக்தர் கூட்டமே சான்று.

பூம்புகார் நகர் கற்பக விநாயகர்: கோவை இடையர்பாளையம் பூம்புகார் நகரில் அமைந்துள்ளது கற்பக விநாயகர் திருக்கோயில். பிள்ளையார்பட்டியில் உள்ள விநாயகரைப் போன்றே இவரை வடிவமைத்துள்ளனர். இச்சிலை பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. துதிக்கை வலஞ்சுழியாக அமைந்திருப்பது; இரண்டு கைகளுடன் அருள்பாலிப்பது; அங்குச பாசங்கள் இல்லாமல் இருத்தல்; ஆசனத்தில் வயிறு படியாமல் அர்த்த பத்ம ஆசனம் போன்று கால்களை மடித்து அமர்ந்திருப்பது; வலக் கரத்தில் மோதகமும், இடக்கரத்தை கடி ஹஸ்தமாக இடையில் வைத்து அருள்பாலிப்பது என அவரது சிறப்புகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். பொதுவாக செட்டி நாட்டவர்கள் பக்தியில் அதிக நாட்டம் உள்ளவர்கள். அவர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள நகரில் அமைந்துள்ளது இவ்வாலயம்.

யோக விநாயகர்: புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 32 வகைப் பிள்ளையார்களில் யோக விநாயகரும் ஒருவர். யோக நிஷ்டையில் அமர்ந்து சதுர் புஜத்துடன் கரும்பு, பாசம், ஜபமாலை மற்றும் யோக தண்டம் ஆகியவற்றைத் தரித்து ஒரு முகத்துடன் அருள்பாலிக்கிறார். சூரியனின் நிறத்தைக் கொண்டவர். ஐயப்பனைப் போன்று இவரது உருவம் அமைந்திருப்பது சிறப்பாகும். திருமண பாக்யம், குழந்தைபாக்யம் அருள்வதில் வல்லவராகக் கருதப்படுகிறார் யோக விநாயகர். கோவை குனியமுத்தூர் சன் கார்டனில் இக்கோயில் அமைந்துள்ளது. சங்கடஹர சதுர்த்தியன்றும் அமாவாசையன்றும் இவருக்கு கணபதி ஹோமமும் சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.

 
மேலும் சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு! »
temple news
மூலாதாரத்திற்கு உரியவராக விளங்கும் விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். இவரை வணங்கி ... மேலும்
 
temple news
விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரைப் போற்றி வழிபடுவதற்கு வசதியாக ஆதிசங்கரர் பாடிய கணேச ... மேலும்
 
temple news
பரமேஸ்வரனின் பிள்ளை, பார்வதியின் பிள்ளை என்றாலே அவர் விநாயகர் என்று தெரியும். ஆனால், இவரை பிள்ளை யார் ... மேலும்
 
temple news
மனிதர்கள் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் கணிப்பது போல கடவுளர்க்கும் ஜாதகம் உண்டு. ஆவணியில் பிள்ளையார் ... மேலும்
 
temple news
இறைவன் செய்யும் தொழில்கள் பஞ்சகிருத்யங்கள் எனப் பெயர் பெறும். அவை படைத்தல், காத்தல், அழித்தல், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar