Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவம்பாளையம் மாகாளியம்மன் கோவில் ... மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசி தெப்பத் திருவிழா துவக்கம் மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேலங்குடி கருப்பர் கோயில் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்
எழுத்தின் அளவு:
வேலங்குடி கருப்பர் கோயில் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்

பதிவு செய்த நாள்

21 பிப்
2026
11:02

திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் வேலங்குடி கருப்பர் கோயிலில் நடந்த மாசித் திருவிழாவில் நேர்த்திக்கடன் நிறைவேற்ற கிராமத்தினர் திரளாக பங்கேற்றனர்.


வேலங்குடியில் சிவராத்திரியை முன்னிட்டு அங்காளம்மன் மற்றும் உறங்காப்புளிக் கருப்பர் சாம்பிராணி வாசகர் கோயில் மாசித் திருவிழா பிப்.12ல் காப்புக்கட்டி துவங்கியது. தொடர்ந்து குல தெய்வமாக வழிபடும் பக்தர்கள் விரதமிருந்து அர்ச்சனை செய்து சுவாமி வழிபாடு செய்யத் துவங்கினர். மறுநாள் சாமி அரிவாளில் ஆடி கப்பறை நடைபெற்றது. பிப்.15ல் சிவராத்திரியை முன்னிட்டு  சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் நடந்த முதல் நாள் திருவிழாவில் அங்காளம்மன் கோயில் உற்ஸவ அம்மன் பச்சைவாழைக் குடிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரண்டாம் நாள் திருவிழாவை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் சாம்பிராணி போட்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் குடும்பத்துடன் வந்து பச்சைவாழை பரப்பியும், கரும்புத் தொட்டில் கட்டியும், அரிவாள் சமர்ப்பித்தும் நேர்த்திக் கடன் நிறைவேற்றினர். கருப்பரின் குதிரை வாகனத்திற்கு மலர் மாலைகள் அணிவித்தனர். பரவலாக அன்னதானங்கள் நடத்தப்பட்டது. இன்று மூன்றாம் நாள் திருவிழா நடைபெறுகிறது. நாளை மஞ்சள் நீராடுதலுடன்  விழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar