திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21பிப் 2026 10:02
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கோஷம் விண்ணதிர கோலாகலமாக தொடங்கியது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித்திருவிழா இன்று பிப்.21 கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக இன்று அன்று அதிகாலை 1:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூபம், 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 5:00 மணிக்கு கோயில் செப்பு கொடிமரத்தில் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கோஷம் விண்ணதிர கொடியேற்றம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது. வரும் 25ம் தேதி இரவு 7.30 மணிக்கு மேல் குடைவரை வாயில் தீபாராதனையும், 27ம் தேதி காலை 5 மணிக்கு உருகு சட்ட சேவையும் நடக்கிறது. அன்று மாலை 4.30 மணிக்கு சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலிக்க உள்ளார். 28ம் தேதி வெள்ளை சாத்தி கோலத்திலும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியானதேரோட்டம் வரும் மார்ச் 2ம் தேதி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார், இணை ஆணையர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.