Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை ஏரிக்குப்பம் யந்திர ... நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி விழா; முகூர்த்தக்கால் நடப்பட்டது நத்தம் மாரியம்மன் கோவில் மாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை சோமநாதர் கோயிலில் யாகசாலை பூஜைகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
மானாமதுரை சோமநாதர் கோயிலில் யாகசாலை பூஜைகள் துவக்கம்

பதிவு செய்த நாள்

20 பிப்
2026
04:02

மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி வைரத்தேருக்கு 22ம் தேதி வெள்ளோட்ட விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு இன்று கோயிலில் யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கியது.


சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் 60 வருடங்களுக்கு முன்பு தேரோட்டம் நடைபெறும் போது 2 பெரிய தேர்களில் தனித்தனியாக சுவாமியும், அம்மனும் நான்கு ரத வீதிகளின் வழியே வலம் வந்தனர். இதில் சோமநாதர் தேர் மிகவும் சேதமடைந்ததை தொடர்ந்து தற்போது அம்மன் சென்ற பெரிய தேரில் சோமநாதர் சுவாமியும், அதற்குப் பின்னால் ஒரு சிறிய தேரில் அம்மனும் தேரோட்ட விழாவின்போது வீதி உலா வருகின்றனர். சோமநாதர் சுவாமிக்கு புதிய தேர் செய்ய வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து புதிதாக தேர் செய்யும் பணி முடிந்துள்ளது. தேருக்கான பிரதிஷ்டை, வெள்ளோட்ட விழா, தேரடி கருப்பன் கோயில் கும்பாபிஷேக விழா பிப். 22ம் தேதி நடைபெற உள்ளது.இதற்காக இன்று காலை 8:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.நாளை22ம் தேதி காலை 9:45 மணிக்கு ரத பிரதிஷ்டையும், 11:00 மணிக்கு புதிய வைர தேர் வெள்ளோட்ட விழாவும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் சிவாச்சாரியார்கள்,பக்தர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் சுவாமியின் 405 வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar