Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லலிதாம்பிகை கோயில் கும்பாபிஷேகம்; ... தேவம்பாளையம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தேவம்பாளையம் மாகாளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

21 பிப்
2026
10:02

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் மார்ச் 2ம் தேதி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணத்தில் 12 சிவன் கோவில்கள் மற்றும் 5 பெரு மாள் கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா மக விழாவும், ஆண்டுதோறும் மாசிமக விழாவும் நடை பெறும். கும்பகோணத்தில் உள்ள மகாமக குளக்கரையில் மாசிமக தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடப்பது வழக் கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிமக தீர்த்தவாரி திருவிழா வருகிற மார்ச் 2ம் தேதி(திங்கட்கிழமை) நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று (21 ம் தேதி) கும்பகோணத்தில் சிவன் கோவில்களில் மாசி மக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்படி காசிவிஸ்வநாதர் கோவில், ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளிட்ட 6  கோவில்களில், சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.


பிறகு, சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள்  சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் முன்னால் எழுந்தருளினர். கொடிமரத்திற்கு எண்ணெய், பன்னீர், பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும் 2ம் தேதி அனைத்து கோவில்களில் இருந்தும் பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவாக புறப்பட்டு மகாமக குளத்தின் கரையில் எழுந்தருகிறார்கள். அதனை தொடர்ந்து மதியம் தீர்த்தவாரி நடக்கிறது.


தொடர்ந்து மாலை 6 மணிக்கு மகாமக குளத்தில் மகா ஆரத்தி வைபவம் நடக்கிறது.  சிவன் கோவிலை தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) வைணவ   கோவில்களில் கொடியேற்றம் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களை சாமி புறப்பாடு நடக்கிறது. 25ம் தேதி பஞ்ச மூர்த்திகள் ஓலை சப்பரத்தில் மூஷிக வாகனம், மயூர வாகனம், ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலாவும், 27ம் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. 28ம் தேதி ஆதிகும்பேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடக்கிறது.  அதன் பின்னர் நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், அமிர்தகலசநாதர், கோடீஸ்வரர், பாணபுரீஸ்வரர் ஆகிய 5 சிவன் கோவில்களில் ஏக தின உற்சவமும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar