Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி ... பழநி முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு திருக்கல்யாணம் பழநி முத்துமாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மன்னார்குடி ஜீயர் தரிசனம்
எழுத்தின் அளவு:
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மன்னார்குடி ஜீயர் தரிசனம்

பதிவு செய்த நாள்

21 பிப்
2026
10:02

மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்கடையூரில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு மன்னார்குடி ஜீயர் செண்டை அலங்கார செண்பக மன்னார் சம்பத்குமார ராமானுஜ ஜீயர் சுவாமிகள் வருகை புரிந்தார். 


கோயில் கண்காணிப்பாளர் மணி, உள்துறை கண்காணிப்பாளர் விருதகிரி ஆகியோர் மன்னார்குடி ஜீயர் சுவாமிகளை வரவேற்றனர்.  கோவில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் மன்னார்குடி ஜீயர் சுவாமிகள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,  நமது தேசத்தின் ஆன்மீக அடையாளங்களாக கோயில்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு குடும்பத்திலும் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளை கோயிலை மையப்படுத்தி நடத்துவது நமது பண்பாடாகும். திருக்கடையூர் கோயிலில் மணிவிழா, சதய விழா திருமணங்கள் என்றில்லாமல் தற்போது அனைத்து மங்கள நிகழ்ச்சிகளையும் நடத்த பக்தர்கள் முன்வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கோயில்களை மிகவும் தூய்மையாக பராமரிப்பதோடு, வழிபாடுகள் குறைவின்றி நடைபெற வேண்டியது அவசியம்.  வளரும் தலைமுறைக்கு நமது பண்பாடு கலாச்சாரங்களை போதிக்க வேண்டியது தற்போது மிக அவசியமாக உள்ளது. இதில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்து கோயில்களின் சொத்துக்கள் காக்கப்பட வேண்டும். இந்து விரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இந்து கோயில்களின் சொத்துக்கள் வழக்கு என்ற அடிப்படையில் செலவு செய்வதை ஏற்க முடியாது. அது வேதனை அளிக்கக்கூடியது. இது தவிர்க்கப்பட வேண்டும்.


ஒவ்வொரு கோயிலுக்கும் அதிகளவில் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளன. கும்பகோணம், மயிலாடுதுறை, திருச்சி என பல முக்கிய கோயில்களில் பக்தர்கள் வரக்கூடிய வாகனங்கள் நிறுத்துவதற்கு உரிய இட வசதி இல்லாமல் இருக்கிறது. இதனால் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு கோயிலுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே ஒவ்வொரு கோயிலிலும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த ஏதுவாக உரிய இடத்தினை தனியாக அமைத்து தர முன்வர வேண்டும். கும்பகோணம் மகாமக விழா 2028 நாடு முழுவதும் பக்தர்கள் பங்கேற்கும் வகையில் சிறப்பாக நடத்திட வேண்டும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar