Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) பதவி உயர்வு கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) அமோக லாபம்
எழுத்தின் அளவு:
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) அமோக லாபம்

பதிவு செய்த நாள்

12 அக்
2016
09:10

துணிச்சலுடன் செயலாற்றும் சிம்ம ராசி அன்பர்களே!

சுக்கிரன், சூரியன், குரு ஆகியோரால் நன்மை மேலோங்கும். அக்.25க்கு பிறகு செவ்வாயும், நவ.3க்கு பிறகு புதனும் நன்மை தர காத்திருக்கின்றனர். மற்ற கிரகங்கள் அனைத்தும் திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் பாதிப்பு ஏதும் உண்டாகாது. புதிய முயற்சியில் வெற்றி காண்பீர்கள். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். சூரியனால் செல்வாக்கு மேம்படும். வீண் விரயம் மறைந்து சேமிப்பு உயரும். சுக்கிரனால் சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். புதிய வீடு, மனை வாங்க யோகம் கூடி வரும். அக்.25,26ல் சகோதர, சகோதரி வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம். அக்.21, 22ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் நவம்பர் 1,2,3ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். நவ.3க்கு பிறகு பொன், பொருள் சேரும். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை உருவாகும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நவ.8க்கு பிறகு பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். சூரியனால் உடல் நலம் சிறப்படையும். மருத்துவச் செலவு இனி இருக்காது.

தொழில், வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை நீடிக்கும். அக்.25க்கு பிறகு மறைமுகப் போட்டியாளர்களின் தொல்லை மறையும். அரசாங்க வகையில் இருந்த பிரச்னை நவ.3 க்கு பிறகு மறையும். அரசிடம் எதிர்பார்த்த கோரிக்கை நிறைவேறும். அக்.23,24,27,28,29ல் சந்திரனால் சிறு தடைகள் குறுக்கிடலாம். நவ.6,7,8ல் எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்க பெறுவர்.

பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். புதனால் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்குக்கு பாதிப்பு, வீண் மனக்கவலை முதலியன அக்.18க்கு பிறகு மறையும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் முயற்சி எடுத்தால் கோரிக்கை நிறைவேறும். அக்.19,20, நவ.15 ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் அக்.25க்கு பிறகு உயர்ந்த நிலையை அடைவர். நவ.3க்கு பிறகு பதவி உயர்வு கிடைக்கும்.

கலைஞர்களுக்கு நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.பெரிய நிறுவனங்களில் புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் வளர்ச்சிப்பாதையில் நடை போடுவர். பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது. அக். 25க்கு பிறகு புதிய பதவி கிடைக்கும்.

மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். கடந்த காலத்தில் இருந்த பின்தங்கிய நிலை மறையும். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணை நிற்கும். நவ.3க்கு பிறகு போட்டிகளில் வெற்றி காணலாம்.

விவசாயிகள் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கப் பெறுவர். எள், கரும்பு, கோதுமை போன்ற பயிர்களில் சிறப்பான மகசூலைப் பெறலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் அக்.25க்கு பிறகு நிறைவேறும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்புண்டு. கைவிட்டு போன பொருள் மீண்டும் கிடைக்கும்.

பெண்களுக்கு பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். அக்.30,31ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். நவ.9,10ல் விருந்து விழா என சென்று வருவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். அக்.25க்கு பிறகு அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். நவ.8க்கு பிறகு குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

நல்ல நாள்: உங்கள் ராசிக்கு அக். 19,20,21,22,25,26,30,31 நவ.6,7,8,9,10,15 ஆகியவை நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளுக்குரிய ஏற்பாடு துவங்குதல், பயணம் செய்தல் ஆகியவற்றைச் செய்யலாம்.

கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8ம் இடமான மீன ராசியில் சந்திரன் நவம்பர் 11,12ல் இருப்பார். இந்த காலத்தில் வீண் விவாதங்களைத் தவிர்த்து இறைவழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் விழிப்புடன் இருப்பது அவசியம்.

அதிர்ஷ்ட எண்: 2,3 நிறம்: வெள்ளை, பச்சை

பரிகாரம்: துர்க்கை வழிபாடு உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவரை வழிபடுங்கள். தினமும் மாலையில் விநாயகர் கோவிலில் விளக்கேற்றி வழிபாடு செய்யுங்கள். குலதெய்வத்தை வணங்க மறந்து விடாதீர்கள். பசுவுக்கு அகத்திக்கீரை கொடுப்பது நல்லது.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar