லட்சுமியை வணங்கிய பின்னர் குபேரனை வழிபடுவது சிறப்பு. குபேர வழிபாட்டுக்குரிய கிழமை, வெள்ளி. அவர் அவதரித்த வியாழக்கிழமையும், பூச நட்சத்திரமும் கூடிய நாளில் வழிபடுவதும் நன்மை தரும். அஷ்டமி, நவமி திதி இல்லாத நாளாக இருப்பது நல்லது. நாள் முழுவதும் அமிர்த, சித்தயோகம் அமைய வேண்டும். லட்சுமி, குபேரரை வழிபடும் வீட்டில் கடனோ, பழைய பொருட்களை வாங்க வேண்டிய நிலையோ வராது. பணப்பற்றாக்குறை நீங்கிவிடும். தண்ணீர் கஷ்டம் விலகி விடும். சத்துள்ள, சுவையான உணவு கிடைக்கும். சமூகத்தில் கவுரவமான வாழ்வு ஏற்படும். செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும் என்பது நம்பிக்கை.