திருவண்ணாமலையில் பிரதோஷ வழிபாடு; நந்திய பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜன 2025 06:01
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், தை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
பிரதோஷ வேளையின்போது சிவன் நந்தயின் இரு கொம்புகளுக்கிடையில் நடனமாடுவதாக ஐதீகம். இதனடிப்படையில் தான் சிவாலயங்களில் நந்திக்கு பலவித அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. அதன்படி நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலையில் இன்று (27ம் தேதி) பிரதோஷத்தை முன்னிட்டு, பிரதோஷ காலமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை அண்ணாமலையார் கோயிலில் 5ம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நந்திக்கு விபூதி, மஞ்சள், பால் தயிர், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.