தாலி கட்டும் போது மாங்கல்யம் தந்துனானேன. என்னும் மந்திரம் சொல்வர். இதன் பொருள், மங்களகரமான பெண்ணே! இந்த மாங்கல்ய கயிற்றினை உன் கழுத்தில் கட்டுகிறேன். இதன் மூன்று முடிச்சுகள் என்னை நீண்ட ஆயுளுடன் வைத்திருக்கட்டும். நீயும் நூறாண்டு காலம் வாழ்வாயாக. நாம் இணைந்து இல்லறம் என்னும் தர்மத்தைச் செய்வோமாக என்பதாகும். மணமகன், மணமகளிடம் இதைச் சொல்லி மூன்று முடிச்சு இட வேண்டும் என்கிறது சாஸ்திரம்.