திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. உலகில் வாழும் உயிர்களுக்கு உணவு அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் சிவன் கோயில்களில் ஐப்பசி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று அன்னாபிஷேகம் நடக்கும். நேற்று ஐப்பசி மாத அசுபதி நட்சத்திரத்தில் மாலை 5 மணிக்கு அன்னாபிஷேகத்தால் அண்ணாமலையாரை அலங்கரிக்கும் பணி தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற்றது, அப்போது கோயில் நிர்வாகத்தின் சார்பில் 100 கிலோ அரிசியும், மற்றும் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த அரிசியும் சேர்த்து 500 கிலோ அளவிலான அரிசி சமைத்து அன்னத்தால் அருணாசலேஸ்வரர் அலங்கரித்து சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.