வேலூர்: வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் கிருபானந்த வாரியார் சுவாமியின் 18வது குரு பூஜை விழா நடந்தது.மாவட்ட பதிவாளர் தேவப்பிரகாசம் தலைமை வகித்தார். கோவில் செயலாளர் சுரேஷ் குமார் வரவேற்றார். ரத்தினகிரி சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் வாரியார் திருவுருவ படத்தை திறந்து வைத்தனர். கவிஞர் லக்குமிபதி எழுதிய "கள்வர் ஐவரை காவலில் வை என்ற நூலை ரத்தினகிரி சுவாமிகள் வெளியிட ஆற்காடு தொழில் அதிபர் பாஸ்கர் பெற்றுக் கொண்டார்.மாநகராட்சி மேயர் கார்த்தியாயினி, வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் அனுஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கவிஞர் லக்குமிபதி தலைமையில் கவி அரங்கம் நடந்தது. இதில், மகா லட்சுமி அமர் நாத், சாரதா திருமலை, கல்பனா பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். தம்பிரான் நன்றி கூறினார்.