Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ... பழநி கோயிலில் தங்கி இடைப்பாடி பக்தர்கள் சுவாமி தரிசனம் பழநி கோயிலில் தங்கி இடைப்பாடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈஷா யோக மைய ரதத்திற்கு மன்னீஸ்வரர் கோயிலில் வரவேற்பு
எழுத்தின் அளவு:
ஈஷா யோக மைய ரதத்திற்கு மன்னீஸ்வரர் கோயிலில் வரவேற்பு

பதிவு செய்த நாள்

11 பிப்
2026
10:02

அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ரதத்திற்கு மன்னீஸ்வரர் கோயிலில் வரவேற்பு அளிக்கப்பட்டது


கோவை, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்தில் வருகிற, 15ம் தேதி மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பல நாடுகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் வருகை தர உள்ளனர். மகா சிவராத்திரி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, 13வது ஆண்டாக சென்னையிலிருந்து ஈஷா யோக மையத்திற்கு ரதம் கடந்த ஜன. 15ம் தேதி புறப்பட்டது. ஒன்பது மாவட்டங்களில், 500 கிராமங்கள் வழியாக, 700 கி.மீ., தூரம் பயணித்து, நேற்றுமுன்தினம் மாலை கோவை மாவட்டம் வந்தது. பசூரில் தன்னார்வலர்கள், பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். ரதத்துடன் 63 நாயன்மார்கள் சிலைகள் தாங்கிய வாகனமும் யாத்திரையில் வந்தது. மன்னீஸ்வரர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் வரவேற்பளித்தனர். வட்டமலை ஆண்டவர் கலைக்குழு சார்பில் வள்ளி கும்மியாட்டம் மற்றும் கரகாட்டம் நடந்தது. நேற்று குமாரபாளையம், சென்னப்ப செட்டி புதூர் வழியாக ரதம் கோவில்பாளையத்தை அடைந்தது. தன்னார்வலர்கள் கூறுகையில், தென் கைலாய பக்தி பேரவை சார்பில், சிவாங்க பாதயாத்திரை உடன் இந்த ரதத்தை கிராமங்கள் தோறும் கொண்டு செல்கிறோம். 40 பேர் சென்னையில் இருந்து வெள்ளிங்கிரி மலை வரை பாதயாத்திரையாக செல்கிறோம். பல கிராமங்களிலும் பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சிவராத்திரி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ... மேலும்
 
temple news
 திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, காரைக்கால் அம்மையார் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின், 13வது நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar