Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரிவரதராஜ பெருமாள் கோவிலில் துளசி ... கல்ப விருக்‌ஷ வாகனத்தில் அருள்பாலித்த சென்னை பத்மாவதி தாயார் கல்ப விருக்‌ஷ வாகனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூம்பாச்சி அம்மன் கோவில் ரோடு சேதம்; ராஜகோபுரம் கட்டுவதில் சிரமம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கூம்பாச்சி அம்மன் கோவில் ரோடு சேதம்; ராஜகோபுரம் கட்டுவதில் சிரமம்

பதிவு செய்த நாள்

11 பிப்
2026
10:02

இளையான்குடி; இளையான்குடி அருகே வளையனேந்தல் கிராமத்தில் உள்ள கூம்பாச்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் ரோடு சேதமடைந்துள்ளதால் ராஜகோபுர பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாக பக்தர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.


இளையான்குடி அருகே உள்ள வளையனேந்தல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூம்பாச்சி அம்மன் கோயில் உள்ளது. வளையனேந்தல்,அரியாண்டிபுரம்,தெற்கு கீரனூர், வடக்கு கீரனூர், கருஞ்சுத்தி, கல்வெளிபொட்டல்,புலியூர் ,தரிகொம்பன் கரும்புகூட்டம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு இக்கோயில் குலதெய்வ கோயிலாக விளங்கி வருகிறது. மேலும் அருகில் வேட்டாருடைய அய்யனார் கோயிலும் உள்ளது. இக்கோவில்களுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். வளையனேந்தல்,தெற்கு கீரனூர் செல்லும் ரோட்டிலிருந்து இக்கோயிலுக்கு பிரிந்து செல்லும் ரோடு மிகவும் மோசமான நிலையில் பக்தர்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு உள்ளது. தற்போது இக்கோயிலில் புதிதாக ராஜகோபுரம் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிற நிலையில் கோயிலுக்கு தேவையான கட்டுமான பொருட்கள் மற்றும் கனரக வாகனங்கள் வந்து செல்ல முடியாமல் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் பக்தர்கள் மிகுந்த மன வேதனைக்குள்ளாகி வருகின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் கிராம மக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி உடனடியாக இந்த ரோட்டை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar