ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2026 10:02
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா கண்ணப்பர் கொடியேற்றத்துடன் பிரமாண்டமாக துவங்கியது.
ஆண்டு தோறும் காளஹஸ்தி சிவன் கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 13 நாட்கள் பிரம்மோற்சவம் நடத்துவது பாரம்பரியம். வழக்கமாக, மற்ற அனைத்து பகுதியிலும் வருடாந்திர பிரம்மோற்சவம் பத்து நாட்கள் நடத்தப்படும், ஆனால் ஸ்ரீ காளஹஸ்திவர் கோயிலில், மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் 13 நாட்கள் நடத்தப்படும். தீவிர பக்தியுடன் சிவபெருமானை வழிபட்டு, தன் கண்களைக் கொடுக்கத் தயாராக இருந்த பக்தர் திண்ணனுக்கு காட்சியளித்து அருள் பாலித்தனர். அத்தகைய பக்தர்களிடம் சிவபெருமான் கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்தும் வகையில் கோயிலில் இன்றும் , தற்போது மூலவர் சன்னதியில் கண்ணப்பர் சிலைக்கு ஆர்த்திக்கு பின்னர் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு பூஜை செய்வது பக்தருக்கு அங்கீகாரம் பெறுவதற்கு சான்றாக அமைந்துள்ளது . இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை கோயில் அலங்கார மண்டபத்தில் ராஜேஷ் குருக்கள் தலைமையில் பக்த கண்ணப்பர் உற்சவ மூர்த்தியை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுடன் மேள தாளங்கள் மற்றும் மங்களகரமான வாத்தியங்களுடன் கோயில் அருகில் உள்ள கைலாச மலைக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். அங்கு கோயில் தலைமை அர்ச்சகர் டாக்டர். சுவாமிநாதன் குருக்கள் கண்ணப்பர் மலையில் உள்ள பழமையான பக்த கண்ணப்பர் கோயில் வளாகத்தில் சிறப்பு கலசத்தை நிறுவி, வேதங்களின்படி பூஜைகளை செய்தார். தொடர்ந்து அங்குள்ள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
கோயில் வேதப் பண்டிதரான அர்த்தகிரி சுவாமி யின் வழிகாட்டுதலின் கீழ் வேதப் பண்டிதர்கள் நான்கு வேதங்களை ஓத, கோயில் தலைமை அர்ச்சகர் சுவாமிநாதன் குருக்கள் பூஜைகளை மேற்கொண்டார். கோயில் வழங்கிய துணியை கொடிக் கம்பத்தில் ஏற்றப் பட்டு பிரம்மோற்சவம் தொடங்கியது. பின்னர் முழு ஆராதனை பூஜைகள் செய்து நெய்வேத்யம் வழங்கப்பட்டது. பக்தர்கள் ஹர ஹர மகாதேவ சம்போ சங்கரா என்ற பக்தி கோஷங்களை எழுப்பிய நிலையில், கண்ணப்பர் கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக கொடிமரம் எதிரே உள்ள ஈஸ்வர லிங்கத்திற்கு சிறப்பு ஆராதனை செய்தனர். பின்னர், தேவாரம் பண்டித முத்துக்குமார சுவாமி யின் பாராயணத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. மலையில் உள்ள பக்தகண்ணப்ப சிலைக்கு பூஜைகள், பிரசாதங்கள் மற்றும் ஆரத்தி வழங்கப்பட்டது. அங்கிருந்து, மலையிலிருந்து திக் பாலகர்களை சிறப்பு வரவேற்பு செய்தனர் . விழாவில் கோவில் செயல் அலுவலர் பாபி ரெட்டி, துணை செயல் அதிகாரி மோகன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் கொட்டே சாய் பிரசாத் மற்றும் உறுப்பினர்கள் குர்ரப்பா செட்டி, கரிகாட்டி. ரமேஷ்பாபு, கோவில் ஆய்வாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து