பதிவு செய்த நாள்
17
நவ
2011
10:11
கார்த்திகை மாதம் என்றாலே அது ஐயப்ப பக்தர்கள் மாதம் என்று கூறும் வகையில், ஆண்டுதோறும் சபரி மலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்த பக்தர்களின் வசதிக்காகவும் இதர வாசகர்கள் அறிந்து கொள்ளவும் ஐயப்ப தரிசனம் என்ற புதிய பகுதி உங்கள் இணையதளத்தில் சேர்க்கப்படுகிறது. இதில் ஐயப்பன் வரலாறு, சபரிமலையில் நடைதிறக்கும் நேரம், விரத முறைகள், தமிழிலும் சமஸ்கிருதத்திலும் சரணமாலை, போக்குவரத்து தகவல்கள், வரைபடங்கள், இதர வழிபாட்டு இடங்கள், எரிமேலி முதல் சந்நிதானம் வரையிலான தகவல்கள், இருமுடி பொருள்கள், சபரிமலை பெரிய பாதை படங்கள், வழிபாடு மற்றும் பிரசாத கட்டணம், முக்கிய தொலைபேசி எண்கள், தங்கும் வசதிகள், வீடியோ காட்சிகள், 360டிகிரி கோணத்தில் ஐயப்பன் கோயில், ஐயப்பன் பாடல்கள் மற்றும் ஆடியோ, போட்டோ ஆல்பம், சபரிமலை செல்லும் பெண்களுக்கான குறிப்புகள் போன்ற தகவல்கள் இடம் பெறும். அனைவருக்கும் பயனுள்ள இந்த தகவல்களைப் படித்தும் பார்த்தும் பயன்பெற வேண்டுகிறோம்.
தரிசனம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.