ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருத்தலம் உத்தரகோசமங்கை. மேன்மைமிகுந்த ஆகமங்களை உமையவளுக்கு சிவபெருமான் உபதேசித்த திருத்தலம் இது. இங்குள்ள சிவாலயத்தில் நடராஜர் சன்னதியின் மகாமண்டபத்துக்கு மேற்கே, சிறு கட்டுமலை அமைப்பிலான சன்னதியில், உமாதேவியை மடியில் அமர்த்தி ஆகமங்களை உபதேசிக்கும் கோலத்தில் அருள்கிறார் ஈஸ்வரன். இந்தச் சன்னதியின் படிகள் ஆகமங்களைக் குறிப்பதாக உள்ளன என்கிறார்கள்.