Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் ஆடி ... கேது பெயர்ச்சி: கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனம் கேது பெயர்ச்சி: கீழப்பெரும்பள்ளம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணப்பாறை நல்லாண்டவர் கோயிலில் ஆடி வெள்ளிப்பெருந்திருவிழா
எழுத்தின் அளவு:
மணப்பாறை நல்லாண்டவர் கோயிலில் ஆடி வெள்ளிப்பெருந்திருவிழா

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2017
03:07

திருச்சி: திருச்சி மாவட்டம்,  மணப்பாறை வட்டம், நல்லாண்டவர் வகையறா கோயில்களில்ஆடி வெள்ளிப் பெருந்திருவிழா வரும் 21ம் தேதி துவங்கி 18.08.2017 வரை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

நிகழ்ச்சி நிரல்

28.07.2017  வெள்ளிக்கிழமை

மங்கல நாள்: வளர்நிலா ஐந்தாம் நாள் - (உத்தரம்) உத்திரம் - கை (அஸ்தம்)
விண்மீன்கள் - சித்த அமிர்த ஓகங்கள் கூடிய இறைமங்கல வேளை.
நறுமண நீராட்டு: காலை 9.00 மணி  
உற்சவ மூர்த்தி அருள்மிகு மான்பூண்டி நல்லாண்டவர் மற்றும் அருள்மிகு ஏழுகருப்பண்ணசாமிகளுக்கு நன்னீராட்டு - பேரொளி வழிபாடு.
மங்கல இசை: மாலை 6.00 மணி
நாகக்குழலிசை நாயகன் ஆண்டவர்கோயில் சீனி. இராமகிருஷ்ணன் குழுவினர்.
உட்சுற்று உலா : இரவு 7.00 மணி
தெய்வத்திருமகன் மான்பூண்டி லெக்கையன் திருத்தேரில் உட்சுற்று உலா யாவருக்கும் இறையமுதம் வழங்கல்.

04.08.2017 வெள்ளிக்கிழமை

மங்கல நாள்: வளர்நிலா 12ம் நாள் - குருகு (மூலம்) விண்மீன் - அமிர்த ஓகவேளை
மங்கல நீராட்டு: காலை 9.00 மணி  
உற்சவ மூர்த்தி அருள்மிகு நல்லாண்டவர் மற்றும் காவல்தெய்வம் அருள்மிகு ஏழுகருப்பண்ணசாமிகளுக்கு மங்கல நீராட்டு- பேரொளி வழிபாடு.
பொது விருந்து : பகல் 12.00 மணிக்கு அன்னதானம்
மங்கல இசை : மாலை 6.00 மணி  
மங்கல இசை மைந்தன் ஆண்டவர்கோயில் சீனி. இராமகிருஷ்ணன் குழுவினர்.
உட்சுற்று உலா : இரவு 7.00 மணி
நமது குலதெய்வம் மான்பூண்டி நல்லாண்டவர் திருத்தேரில் உட்சுற்று உலா யாவருக்கும் இறையமுதம் வழங்கல்.

03.08.2017 வியாழக்கிழமை

மங்கல நாள்: வளர்நிலா பதினொன்றாம் நாள் - துளங்கொளி (கேட்டை) விண்மீன் சித்த ஓகம் கூடிய இறைமங்கல வேளை.
புனித நீராட்டு: காலை 9.00 மணி
உற்சவமூர்த்தி அருள்மிகு மான்பூண்டி லெக்கையன் மற்றும் காவல்தெய்வம் அருள்மிகு ஏழுகருப்பசாமிகளுக்குப் புனித நீராட்டு - பேரொளி வழிபாடு.
மங்கல இசை: மாலை 6.00 மணி
மங்கல இசை மாமணி ஆண்டவர்கோயில் எம். எஸ். கிருஷ்ணன் குழுவினர்.
உட்சுற்று உலா: இரவு 7.00 மணி
மாமுண்டிச் சீமை மாமன்னன் அருள்மிகு மாமுண்டி நல்லையன் மலர்த்தேரில் உட்சுற்று உலா - அனைவருக்கும் இறையமுதம் (அருட்பிரசாதம்) வழங்கல்.

11.08.2017 வெள்ளிக்கிழமை

மங்கல நாள்: பிறைநிலா நான்காம் நாள் - நாழி (பூரட்டாதி) - முரசு (உத்திரட்டாதி) விண்மீன்கள் - சித்த ஓகம் கூடிய இறைமங்கல வேளை.

சிறப்புமிகு வழிபாடு: காலை 9.00 மணி
அருள்மிகு உற்சவமூர்த்தி மாம்பூண்டி லெக்கையன் மற்றும் காவல்தெய்வம் அருள்மிகு ஏழுகருப்பசாமிகளுக்கு நறுமண சிறப்பு நீராட்டு - பேரொளி வழிபாடு.

பொது விருந்து: பகல் 12.00 மணி
திருக்கோயில் திருமண மண்டபத்தில் சிறப்புமிகு அன்னதானப் பொதுவிருந்து.

மங்கல இசை: மாலை 6.00 மணி
நாகக்குழலிசை நாயகன் ஆண்டவர்கோவில் சீனி. இராமகிருஷ்ணன் குழுவினர்.

கேரள மங்கல இசை: இரவு 8.00 மணி
மலையாள நாட்டு மங்கல இசை நாயகன் ஜெண்டை மேளம் கொல்லங்கோடு கு.சசி குழுவினர்.

தமிழ்நாட்டுக் கலைவிழா: இரவு 9.00 மணி
விஜய் தொலைக்காட்சி புகழ் சிறப்பு நிலைக் கலைஞர்கள் ஜெயா தொலைக்காட்சி பின்னணிப் பாடகர் தாஸ். மதுரை திருப்பதி ராஜா பி.எஸ்சி., வழங்கும் டுவிஸ்ட் அகாடமிக் குழுவினரின்
மாபெரும் பல்சுவைக் கதம்ப நிகழ்ச்சி

திருக்கோயில் தெய்வங்கள் திருவீதித் திருஉலா: நள்ளிரவு 2.30 மணி  
குதிரை வாகனத்தில் குறைகளையும் கோபாலனின் திருவீதி உலா மற்றும் மின்னொளி வீசும் அழகுமிகு அலங்காரப் முத்துப் பல்லக்கில் திருக்கோயில் தெய்வங்களின் ஆலய வெளிச்சுற்று உலா. வானப்பெருவெளியில் காணக்கிடைக்காத வாணவேடிக்கை.

 18.08.2017 வெள்ளிக்கிழமை

இனிய நாள்: பிறை நிலா பதினொன்றாம் நாள், சித்த ஓகம், மூதிரை (திருவாதிரை) விண்மீன் கூடிய இறைமங்கல வேளை.
நறுமண நீராட்டு : காலை 9.00 மணி
அருள்தரும் உற்சவ மூர்த்தி மான்பூண்டி நல்லாண்டவருக்கும் மற்றும் காவல்தெய்வம் அருள்மிகு ஏழுகருப்பண்ண சாமிக்கும் புனிதமிகுப் பொருட்களால் நறுமண நீராட்டு, பேரொளி வழிபாடு.
மங்கல இசை: மாலை 6.00 மணி
நாகக்குழலிசை நாயகம் மலேசியா புகழ் எம்.எஸ். கே. மருதமுத்து குழுவினர் ஆண்டவர்கோவில்
உட்சுற்று உலா :இரவு 7.00 மணி
அருள்மிகு உற்சவமூர்த்தி மாமுண்டி லெக்கையன் ஆலய உட்சுற்று இரத உலா. அனைவருக்கும் இறையமுதம் எனும் அருட்பிரசாதம்.

உன்னதமிகு கோகுலாஷ்டமி உறியடித் திருவிழா கலியுகக் கடவுள் கண்ணபிரான் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
 14.08.2017  திங்கட்கிழமை பிறைநிலா 8 ஆம் நாள் எனும் அஷ்டமி திதி, அடுப்பு (பரணி) வண்மீன் சித்தஓகம் கூடிய இறையருள் வேளை.
மங்கல இசை : மாலை 6.00 மணி
நாகக்குழல் நாயகன் ஆண்டவர்கோவில் சீனி. இராமகிருஷ்ணன் குழுவினர்
உறியடித்திருவிழா: இரவு 7.00 மணி
அருள்மிகு கலியுகக் கண்ணன் பிறந்த நாளில் உறியடித் திருவிழா வழுக்கு மரம் ஏறுதல் கொண்டாட்டம்.
திருக்கல்யாணம் : இரவு 8.00 மணி
தெய்வத்திருமகளிர் பாமா - ருக்மணி ஆகிய இணையர் இருவரையும் ஒரு சேர இறைவன் கண்ணன் மணந்து மகிழும் தெய்வங்களின் திருக்கல்யாண மங்கல விழா, அனைவருக்கும் இறையமுதம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி மாத கார்த்திகை ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோபால்பட்டி, சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறை ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் சித்திரை ... மேலும்
 
temple news
சென்னை : சபரிமலையில் பக்தர்க:ள் தரிசனத்திற்கு தடை ஏற்படுத்தக் கூடாது என, சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் ... மேலும்
 
temple news
மதுரை : தேவன்குறிச்சி அக்னீஸ்வரர் கோமதி அம்மன் கோயிலில் பக்தர்கள் கல்வெட்டுகள் மீது சூடம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar