ஏழரைச்சனி துன்பத்தை மட்டுமே தரும் என்பது தவறு. இந்தக்காலத்தில் ஏற்றமும் வரும். நமக்கு துன்பம் ஏற்படக் காரணம் நம் முன்வினைப்பயனும் இப்போது செய்யும் செயல்களின் விளைவுமே ஆகும். அதற்குரிய தண்டனையைத் தர வேண்டிய கட்டாயம் சனிபகவானுக்கு உள்ளது. அந்த தண்டனையில் இருந்து தப்பிக்க நம் செயல்களை நேர்மையாக்கிக் கொள்வதுடன், சனிக்கிழமைதோறும் சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றியும், அன்னதானமும் செய்தால் கஷ்டத்தின் தாக்கம் குறையும். பிரதோஷ விரதம் இருந்தால் ஏற்றம் ஏற்படும்.