ஓம் என்ற ஒலி முறையான அதிர்வுடன் உச்சரிக்கப்பட்டால் மட்டுமே பலன் கொடுக்கும். எனவே அவரவர்கள் தங்கள் சுயபரிசோதனை மூலமோ அல்லது குருவிடமோ கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். ஓங்கார ஒலி பிரபஞ்சத்தின் மூல சப்தம் அது அண்டத்திலும் உள்ளது பிண்டத்திலும் உள்ளது. மேலும் பல மந்திர ஒலிகளும் இது போல விண்வெளியில் பரவியுள்ளது என்றும் அதை யோக சாதனை செய்வதன் மூலமே கேட்க முடியும் என்று சித்தர்களின் பாடல்கள் தெரிவிக்கிறது. நாம் வாயால் உச்சரிக்கும் ஒலிகள் எப்படி இருக்கிறது என்றால் சினிமா பாடகி ஜானகியின் குரல் இனிமையாக இருக்கிறது என்று சொல்வதற்கும் தேன் இனிப்பாக உள்ளது என்று சொல்வதற்கும் எவ்வாறு ஒற்றுமையும் வேற்றுமையும் உள்ளதோ அது போலவே வெளியில் ஒலிக்க கூடிய மந்திரங்களும் இருக்கிறது.
வேதங்கள் கூறுவது என்னவெனில் ஓம் என்ற ஒலியிலிருந்தே பிரபஞ்சம் உண்டாகி விரிவடைந்து கொண்டு செல்கிறது அது ஒவ்வொரு அணுவிலும் சக்தியாக இருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த ஒலியை உணர வேண்டுமெனில் மனிதன் தன் ஐம்புலன்களை கடந்த நிலைக்கு செல்ல வேண்டும் அது யோக சாதனைகளால் மட்டுமே முடியும். ஏனெனில் அதற்கான விஞ்ஞான விளக்கம்..
மனிதன் தன் காதுகளால் உணர கூடிய ஒலி அலைகளின் எல்லையை விஞ்ஞானம் ஏற்கனவே கண்டறிந்துள்ளது. அதாவது 20(ஏஙூ) என்பது ஒரு துகள் ஒரு நொடிக்கு இருபது முறை அதிர்வதால் உண்டாகும் ஒலியின் நிலையாகும் இவ்வாறு ஒரு நொடிக்கு 20 (ஏஙூ) முதல் 20, 000 (ஏஙூ) வரை அதிரக்கூடிய துகளின் ஒலி அலைகள் மட்டுமே மனித காதுகளில் கேட்க முடியும். விலங்குகள் மற்றும் பறவைகள் இதில் விதிவிலக்காக இருக்கிறது. அது பிரபஞ்சம் ஐந்தறிவு ஜீவன்களுக்கு கொடுத்த வரப்பிரசாதமாகவே கருதலாம். ஏனென்றால் அந்த ஓங்கார ஒலியை கேட்டு உணர கூடிய உயிரினங்களே தன்னிலிருந்து இன்னொரு நிலைக்கு பரிமாற்றம் அடைய முடியும். விலங்குகளும் பறவைகளும் நம்மை போல் தியானம் யோகப்பயிற்சி எல்லாம் செய்ய முடியாது இயற்கை சீற்றம் பூகம்பம் போன்றவை வருவதற்கு முன்பே அதை உணர்ந்து கொண்டு அதன் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக இயற்கை கொடுத்த வரமாகவே கருதலாம்.
அதனால்தான் பூகம்பம் வருவதற்கு முன்பே சுற்றுபுற ஒலி அலைகளில் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்து பறவைகள் சிதறி பறந்தோடுகிறது நாய்கள் குரைக்கிறது. மாடுகள் மற்றும் பல விலங்குகள் மிரண்டு ஓடுகின்றன. மழை வரும் முன்பே தும்பி என்ற தட்டான் பூச்சி கூட்டமாக பறக்கிறது. தவளைகள் கத்துகின்றன. மனித இனம் மட்டும் இந்த விஷயத்தில் செவிடாகவே உள்ளது. ஏனென்றால் 20 (ஏஙூ) கீழே உள்ள ஒலி அலைகள் உணர முடிவதில்லை ஏனென்றால் விண்ணிலிருந்து வரக்கூடிய ஒலி மற்றும் பூமியின் காந்த விசை ஒலி பூமி சுழலும் ஒலி ஆகியவை ஒன்றுக்குள் ஒன்று மோதி கலந்து மீண்டும் பூமியின் தரையில் மோதும்போது அதன் ஒலி அளவு ஏறக்குறைய 7,83 (ஏஙூ) என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இது 20 (ஏஙூ) க்கும் கீழே உள்ளதால் நாம் கேட்க முடியாது ஆனால் ஐம்புலன்களை கடந்த யோகிகளின் காதுகளில் அது ஒலிக்கும் அதையே நாதபிரம்ம ஒலி என கூறுகிறார்கள். பிரபஞ்சம் மனிதனுக்கு விதித்த வரையரை எல்லைகளை யோகிகள் கடந்து விடுவதால் அவர்களால் உணர முடியாத விஷயம் என்று எதுவும் இல்லை.