ஹேவிளம்பி ஆண்டு ஆவணி 1 முதல் 5 வரை (ஆக.17–21) தீபஸ்தம்ப யோகம் உண்டாகிறது. இந்நாளில் கோயிலில் விளக்கேற்றி வழிபட்டால் ஒளிமயமான எதிர்காலம் உண்டாகும். ராசி கட்டத்தில் வலது புறம், இடது புறம் என பிரிவுகளும், அதில் நான்கு ராசிகளும் உண்டு. வலது புறத்தில் மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளும், இடப்புறத்தில் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளும் இருக்கும். வலது பக்கம் அல்லது இடது பக்கம் உள்ள ராசிகளில் வரிசையாக கிரகங்கள் இருந்தால் தீப ஸ்தம்ப யோகம் உண்டாகும். ஆவணி மாதப்பிறப்பன்று வலது புறத்திலுள்ள மிதுனத்தில் சுக்கிரன், கடகத்தில் செவ்வாய், புதன், ராகு, சிம்மத்தில் சூரியன், கன்னியில் வியாழன் ஆகிய கிரகங்கள் வரிசையாக அமர்கின்றன. பார்ப்பதற்கு விளக்குத்தூண் போல இருப்பதால் தீபஸ்தம்பம் எனப்படுகிறது. துாணின் உச்சியில் உள்ள மிதுனத்தில் உள்ள கிரகமான சுக்கிரன் தீபம் என்ற யோகத்தைப் பெறும்.