Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) - சொத்து சேரும் காலம் கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்)  முயற்சியில் வெற்றி மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (15.5.2018 – 14.6.2018)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) - ஆரோக்கியம் மேம்படும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2017
10:08

குருவை ஆட்சி நாயகனாக கொண்ட மீன ராசி அன்பர்களே!

இந்த மாதம் சூரியன், கேது சாதகமாக உள்ளனர். செவ்வாய் ஆக.28-க்கு பிறகும் புதன் செப்.2-க்கு பிறகும் நன்மை தருவர். சுக்கிரன் செப்.15- வரை சாதகமான பலன் கொடுப்பார். இதனால் பெரியோர் ஆதரவும், ஆலோசனையும்  கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர்.

குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்து  நன்மைகளை  வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். சமூகத்தில் செல்வாக்கு உயர்ந்திருக்கும். நினைத்ததை சிறப்பாக நிறைவேற்றி இருப்பீர்கள். வீடு மனை வாங்கி இருப்பீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்கி இருக்கலாம். இந்த நிலையில் செப்.2-ல் குரு 8-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. இதனால்  மனதில் வேதனையும், நிலையற்ற தன்மையும் உண்டாகும். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வையால் இடையூறுகளை முறியடித்து வாழ்வில் வெற்றி காண்பீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.  மாதத் தொடக்கத்தில் எடுத்த முயற்சி அனைத்திலும் வெற்றி கிடைக்கும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். ஆக.21-க்கு பிறகு மனதில் பக்தி எண்ணம் மேம்படும். இஷ்ட தெய்வ வழிபாட்டால் நன்மை அதிகரிக்கும். புதிய வீடு-, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். செப். 2-க்கு பிறகு திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். கணவன்-, மனைவி இடையே இருந்த கருத்துவேறுபாடு மறையும். பிரிந்திருந்த குடும்பம் நிரந்தரமாக ஒன்று சேரும். செப்.7,8,9-ல் பெண்களால் நன்மை உண்டாகும்.  விருந்து, விழா என சென்று வருவீர்கள்.  செப்.3,4-ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆக. 18,19, செப்.14,15-ல் உறவினரால் பிரச்னை ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.  பிள்ளைகளின் உடல்நிலையும் ஆக.28க்குப் பிறகு சீராகும்.
தொழில், வியாபாரம்- சிறப்படையும்.

எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டை விலகும். புதிய வியாபார முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். ஆக.22,23-ல் எதிர்பாராத பணலாபம் கிடைக்கும். செப்.5,6,10, 11-ல் பண விரயம் ஆகலாம். முயற்சிகளில் தடைகளைச் சந்திக்கலாம்.

பணியாளர்களுக்கு சூரியனால் பணியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆக. 28க்கு பிறகு புதிய பதவி தேடி வரும்.  தனியார் துறையில் இருப்பவர்கள் பணிச்சுமையைச்
சந்திக்க வாய்ப்புண்டு. சற்று பொறுமை தேவை.  செப்.2-க்கு பிறகு நிலைமை படிப்படியாக சீராகும்.  அதிகாரிகளின் அனுசரணையும், சக ஊழியர்களின் ஆதரவும் கிடைக்கும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள்  ஒன்று சேருவர். ஆக.31, செப்.1,2ல் எதிர்பாராமல் சலுகை கிடைக்க வாய்ப்புண்டு.

கலைஞர்கள்-  புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். சேமிக்கும் விதத்தில் வருமானம் கிடைக்கும். சக கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவியோடு நற்புகழும் கிடைக்கப் பெறுவர்.

மாணவர்கள்- கல்வியில் வளர்ச்சி காண்பர். போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவர். பெற்றோர், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இந்த மாதத்தை பொறுத்தவரை கூடுதல் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்.

விவசாயிகள்- போதிய வருமானம் கிடைக்கப் பெறுவர். நெல், கோதுமை, கரும்பு, சோளம், எள், கொள்ளு, கிழங்கு போன்ற பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை
வகையிலும் ஆதாயம் அதிகரிக்கும். ஆக.28க்கு பிறகு புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

பெண்கள் சிறப்பான நிலையில் இருப்பர். ஆக. 28-க்கு பிறகு அபார ஆற்றல் பிறக்கும். தோழிகள்  ஆதரவுடன் செயல்படுவர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். செப்.2க்கு பிறகு தடைபட்டு வந்த திருமணம் நடைபெறும். ஆக. 24,25-ல் விருந்து விழா என சென்று வருவீர்கள். ஆக.17,செப்.12,13-ல் ஆடை, ஆபரணம் சேர யோகமுண்டு.  பிறந்த வீட்டில் இருந்து பண உதவி கிடைக்கப் பெறலாம்.

நல்ல நாள்: ஆக.17, 22, 23, 24, 25, 31,
செப்.1, 2, 3, 4, 7, 8, 9, 12, 13
கவன நாள்:  ஆக. 26, 27, 28- சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 2, 3         
நிறம்: வெள்ளை, சிவப்பு

பரிகாரம்
* செவ்வாயன்று முருகனுக்கு நெய் விளக்கு
* ஞாயிறு ராகு காலத்தில் பைரவர் அர்ச்சனை
* புதன் கிழமையன்று சரஸ்வதி வழிபாடு

 
மேலும் வைகாசி ராசிபலன் (15.5.2018 – 14.6.2018) »
temple
நட்புக்கு முன் உதாரணமான மேஷ ராசி அன்பர்களே!

குரு உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் அமர்ந்து நன்மையை ... மேலும்
 
temple
துணிவே துணை என செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் 3-ம் இடத்தில் இருக்கும் ராகுவால் ... மேலும்
 
temple
மனசாட்சியுடன் நடக்க விரும்பும் மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் 5-ம் இடத்தில் இருக்கும் குருவால் ... மேலும்
 
temple
கடமையை கண்ணாக மதிக்கும் கடக ராசி அன்பர்களே!

சூரியன் இந்த மாதம் 11-ம் இடமான ரிஷபத்தில் இருந்து ... மேலும்
 
temple
சிந்தனை சிற்பிகளாக விளங்கும் சிம்ம ராசி அன்பர்களே!

ராசிக்கு 6-ம் இடத்தில் இணைந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.