Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) - பெண்களால் நன்மை ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) முயற்சியில் வெற்றி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்)  முயற்சியில் வெற்றி

பதிவு செய்த நாள்

14 செப்
2017
03:09

நட்புக்கு முன்னுரிமை தரும் மேஷ ராசி அன்பர்களே!

நற்பலன்கள் அதிகரிக்கும் மாதமாக அமையும். சூரியன் சாதகமான இடத்திற்கு வருகிறார். புதன் செப்.22 ல் இருந்தும், செவ்வாய் அக்.15 ல் இருந்தும், சுக்கிரன் அக்.10 வரையும் நன்மை தருவர். குரு மாதம் முழுவதும் நன்மை தருவார். மற்ற கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும் பாதகமான பலன் நடக்காது. பொருளாதார வளம் கூடும். சமூகத்தில் மதிப்பு சிறப்பாக இருக்கும். புதிய முயற்சியை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தேவை பூர்த்தியாகும். ஆனால் செப். 22 வரை வீண் விவாதங்களில்
ஈடுபட வேண்டாம்.

குடும்பத்தில் பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். மனதில் பக்தி எண்ணம் மேலிடும். மாத தொடக்கத்தில் வெளியூர் பயணம் ஏற்படலாம்.

பிரிந்திருந்த குடும்பத்தினர் செப். 22க்கு பிறகு ஒன்று சேர்வர். கணவன், மனைவி இடையே இருந்த பிரச்னை மறையும். வீட்டில் குதூகலம் உண்டாகும். விருந்து விழா என சென்று வருவீர்கள். அக்.2,3,4 ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால், செப்.13,14, அக்.17ல் அவர்கள் வகையில் வீண் விரோதம் வரலாம். எனவே சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. அக்.7,8 ல் பெண்களால் பணம் கிடைக்கும். அக். 14 க்கு பிறகு புதிய வீடு,மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.செவ்வாயால் உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம். அக்.14க்கு பின் ஆரோக்கியம் மேம்படும்.

தொழில், வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். புதிய வியாபாரத்தில் ஓரளவு வளர்ச்சி காணலாம். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். தொழில்ரீதியாக வெளியூர் சென்றவர்கள் செப்.22க்கு பிறகு
ஊர் திரும்புவர். செப்.20,21,22ல் எதிர்பாராத பணவரவு உண்டாகும்.  

பணியாளர்களுக்கு அலைச்சல், வேலைப்பளு ஏற்பட்டாலும் அதற்குரிய பலன் கிடைக்கும். குருபகவான் துணையோடு உயர்ந்த நிலையை அடைவர். பணியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். செப்.30, அக்.1ல் சிறப்பான பலனை காணலாம்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். போதிய வருமானம் கிடைக்கும். அக்.10க்கு பிறகு சுக்கிரன் சாதகமற்று இருப்பதால் விடாமுயற்சி தேவை.

அரசியல்வாதிகள் ஓரளவு பலனை எதிர்நோக்கலாம். பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது.

மாணவர்கள் மாத தொடக்கத்தில் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். செப்.22 க்கு பிறகு புதன் சாதகமாக காணப்படுவதால் நற்பலன் உண்டாகும். ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும்.

விவசாயிகளுக்கு மகசூல் சீராக இருக்கும். ஆனால் அதிக உழைப்பு தேவைப்படும். கால்நடை மூலம் எதிர்பார்த்தபலன் கிடைக்காது. வழக்கு, விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம். அக்.14க்கு பிறகு, புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு.  பெண்கள் சிறப்பான நிலையில் இருப்பர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்ல வாய்ப்புண்டு. தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் செப்.22 க்கு பிறகு கைகூடும். கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அக்.14க்கு பிறகு பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். சுய தொழில் செய்யும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர்.  

அக். 11,12 ல் புத்தாடை அணிகலன் கிடைக்க பெறுவீர்கள். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வர பெறலாம். செப். 23,24 ல் விருந்து விழா என சென்று வருவீர்கள்.

நல்ல நாள்: செப். 20, 21, 22, 23, 24, 30,
அக். 1, 2, 3, 4, 7, 8, 11, 12
கவன நாள்: செப். 25,26 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,9     நிறம்: சிவப்பு, மஞ்சள்

பரிகாரம்
● சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள் தீபம்
● செவ்வாயன்று முருகனுக்கு பாலாபிஷேகம்
● ஞாயிறு ராகு காலத்தில் பைரவர் வழிபாடு

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar