திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், தாயார் சன்னதியில், கார்த்திகை தீபத்தை தொடர்ந்து சங்கு மற்றும் ஸ்ரீ வடிவிலான சகஸ்ர தீபம் ஏற்றப்பட்டது.
திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சகஸ்ர தீப வழிபாடு நடந்தது. தாயார் சன்னதியில், கார்த்திகை தீபத்தை தொடர்ந்து சங்கு மற்றும் ஸ்ரீ வடிவிலான சகஸ்ர தீபம் ஏற்றப்பட்டது. சங்கு, கரம், ஸ்ரீ முத்திரையில் தீபங்கள் பார்க்க மிகவும் அழகாக காட்சியளித்தது. ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.